விஜய் முதலமைச்சர், எம்எல்ஏ ஆன பிறகு சினிமாவில் நடிக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், நடிகர் விஜய்யின் தவெக பெரும்பாலான இடங்களில் 100 இங்ஙகளை தாண்டியுள்ளது. நடிகர் விஜய் தாம் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் முன்னிலை வகிக்கிறார். இந்த சூதுலில் விஜய் எம்எல்ஏ அல்லது முதலமைச்சர் பதவியில் இருந்தால் நடிக்க முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம்.
எம்எல்ஏ பொறுப்பில் இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நேரடித் தடை ஏதும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது என நீதிமன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ சினிமாவில் நடிப்பதற்கு சட்டப்பூர்வத் தடை ஏதும் இல்லை என்று என்.டி. ராமாராவ் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 'ஆதாயமிக்க பதவி'யில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது. ஆனால், சினிமா நடிப்பு என்பது ஒரு தனியார் தொழில்முறைச் செயல்பாடாகக் கருதப்படுவதால், அது பொதுவாக இந்தப் பிரிவின் கீழ் வருவதில்லை.
இருப்பினும், முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இருக்கும்போது, பொதுப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக பலரும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனால்
இந்திய அரசியலில் பல திரைப்பிரபலங்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் படங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் 1967-ல் எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் பல வெற்றிப் படங்களில் நடித்தார். 1977-ல் முதலமைச்சரான பின்னரே நடிப்பதை முழுமையாகத் தவிர்த்தார். ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தபோதே என்.டி. ராமாராவ் 'விஸ்வாமித்ரா' போன்ற படங்களில் நடித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது, ஆனால் நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.
தமிழகத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும் 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் உதயநிதி ஸ்டாலின்: நடித்தார். தற்போது ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சராக இருக்கும் பவன் கல்யான், அரசியலில் இருந்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார்.
கேரளாவில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோதும் கே.பி. கணேஷ் குமார், மத்திய அமைச்சரன பிறகு சூரேஷ் கோபி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். விஜய் தனது அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், சட்டப்படி அவர் எம்எல்ஏ ஆன பிறகும் நடிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.












Click it and Unblock the Notifications