Over confidence உடம்புக்கு ஆகாது! அண்ணா அறிவாலயம்: ‘2,0 லோடிங்’ டிஜிட்டல் திரை அகற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த, திராவிட மாடல் 2.0 டிஜிட்டல் திரை திடீரென அகற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தொடர்ந்து 2வது முறையாக வெல்லும் என்ற அதீத நம்பிக்கையில் இந்த டிஜிட்டல் கவுண்டவுன் வைக்கப்பட்ட நிலையில், முடிவு மாறியதால் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் நுழைவு வாயில் அருகே பிரம்மாண்டமான டிஜிட்டல் திரை ஒன்று நிறுவப்பட்டது. அதில், "Loading" என்ற வாசகமும், தேர்தல் முடிவு வெளிவர எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதும் காட்டப்பட்டது,

DMK Digital board

பல நலத்திட்டங்கள், மகளிரை குறிவைத்து நலத்திட்ட உதவிகள் அனைத்தும் திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சியினர் நம்பினர். இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மீண்டும் திமுக ஆட்சி வரும்" என்பதை அதீத நம்பிக்கையுடன் திமுகவினர் வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்தத் திரை சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் "ஆட்சி முடியப்போகிறது, அதான் லோடிங் ஆகிறது" என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்தனர்.

சில மீம்களில் "திமுகவின் தோல்வி லோடிங் ஆகிறது" என்று கிண்டல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த டிஜிட்டல் திரை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் முடிவு எதிர்பார்த்த படி இல்லை என்பதால் இனி டிஜிட்டல் கவுண்டவுன் தேவையில்லை என்று திமுக வினர் அகற்றினர்.

மேலும் புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து விட்டு, எங்களை மக்கள் மறந்துவிட்டார்களே என்று அங்கிருந்த தொண்டர்கள் மனவேதனையை வெளிப்படுத்தினர். எனினும் இதை குறிப்பிட்டுள்ள திமுகவினர், திமுக தேர்தலுக்கான அரசியல் கட்சி என்றும், மக்களுக்கான கட்சி என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் கட்சி உழைக்கும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+