கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி.. 4 பேர் காயம்.. என்ன நடந்தது?

  • திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 4 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததில் தீ மளவளவென பரவியதால், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிட்காட் தொழிற்சாலையில் அமைந்துள்ள இரும்பு உருக்காலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, திடீரென ராட்சத பாய்லர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர் ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்ததால், தீ மளவளவென பரவியது. இதனால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பாய்லடி வெடித்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 18 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அமோனியா வாயு அகற்றும் பணிகள் 4 நாட்கள் நடத்தப்பட்டு தொழிற்சாலைக்கு சீட் வைக்கப்பட்டது. தற்போது அதே மாவட்டத்தில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    SIPCOT: Boiler Explosion at Iron Smelting Factory in Gummidipoondi SIPCOT Leaves 1 Dead, 4 Injured