வேவு பார்க்கும் சேகர்பாபு.. அறநிலையத்துறையில் கருப்பு ஆடு! பிடிக்காமல் விடமாட்டேன்! சூளுரைத்த ரமேஷ்!

  • திருச்சி: எதிர்க்கட்சிக்ளின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எதிர்க்கட்சியினருக்கு மாண்பு இருக்கிறதா? எப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிக்கு தெரியவில்லை; சட்டப்பேரவையில் சண்டை நிகழ வேண்டும் என திமுகவினர் கூச்சலிடுகின்றனர். வரிக்கு வரிக்கு கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிற்கு தகவல் கொடுத்தது யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ரேஷன் அரிசியை மக்கள் பயன்படுத்துவதில்லை; தரமாக கொடுக்க வேண்டும் என்பது முதல்வரின் நோக்கமாக உள்ளது; கடந்த திமுக ஆட்சி காலத்தில் சட்டசபையில் ஜனநாயகம் இல்லை; தற்போது தவெக ஆட்சியில்தான் உள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய்யை நம்பி கட்சிக்கு வந்தவர்களை அவர் பார்த்து கொள்வார். பட்ஜெட் கூட்டம் முடிந்த பின்பு மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு எந்த இடத்தில் அமர வைக்க வேண்டுமோ? அங்கு அமர வைக்கப்படுவார்கள்.

    அரசை நோக்கி வரும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வதில் தவறு கிடையாது. திர்க்கட்சிக்ளின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எதிர்க்கட்சியினருக்கு மாண்பு இருக்கிறதா? எப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிக்கு தெரியவில்லை; சட்டப்பேரவையில் சண்டை நிகழ வேண்டும் என திமுகவினர் கூச்சலிடுகின்றனர். வரிக்கு வரிக்கு கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.

    Advertisement

    நூறு நாளில் ஒட்டுமொத்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது அதை யாராலும் செய்ய முடியாது தலைகீழாக மாற்றுவதற்கு இது சினிமா கிடையாது. செல்போனை பாதுகாக்க ஐந்து ரூபாய் நியமிக்கப்பட்டுள்ளது அது எப்பொழுதும் இருப்பது தான். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பொழுது செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே மன நிலையில் உள்ளார்கள்.

    அதே மனநிலை தமிழ்நாட்டு கோவில்களுக்கு செல்லும்போது வரும். செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே மன நிலையில் உள்ளார்கள் அதே மனநிலை தமிழ்நாட்டு கோவிலுக்கு செல்லும் போது வரும். சேகர் பாபுவிற்கு தகவல் கொடுத்தது யாராக இருந்தாலும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். துறையில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஒரு அரசுத் துறையில் வேவு பார்ப்பது ஏன்? திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக ஏராளமான பணிகள் அறிவிக்கப்பட்டது" என்றார்.

    English Summary

    Tamil Nadu Minister Ramesh alleges a leak in the HR&CE Department and vows action against those sharing information with Sekarbabu.