திண்ணையில் படுத்த தூத்துக்குடி முத்துலட்சுமி.. மயங்கி விழுந்தும் விடாத கொடுமை.. இரவில் என்ன நடந்தது

  • தூத்துக்குடி: தூத்துக்குடி முத்துலட்சுமி எப்படியாவது உயிர் பிழைத்து விடுவார் என்றுதான் உறவினர்கள் நினைத்தார்கள்.. ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், அவரை காப்பாற்ற முடியவில்லை.. இந்த மரணத்தை தாங்கி கொள்ள முடியாத உறவுகள் கொந்ளித்து போராட்டத்தை கையில் எடுத்து விட்டனர்.. இதனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது முத்துலட்சுமிக்கு?

    Advertisement

    தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி... 56 வயதாகிறது.. கணவரால் கைவிடப்பட்டவர் இவர், தன்னுடைய மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கக்கூடிய பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து, தன்னுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார் முத்துலட்சுமி..|

    Advertisement

    தூத்துக்குடி முத்துலட்சுமி

    கடந்த ஜூலை 15-ம் தேதி மகள் சத்யா சொந்த வேலையாக வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி, அன்றைய இரவு வீட்டிற்குள் தூங்க சென்றார்.. ஆனால் வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால், காற்றுக்காக வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார்.

    மறுநாள் காலையில் வழக்கம்போல அந்த வழியே சென்ற அக்கம் பக்கத்தினர், திண்ணையில் முத்துலட்சுமி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முத்துலட்சுமிக்கு தீவிர சிகிச்சையும் தரப்பட்டது. ஆனால், ஜூலை 18-ம் தேதி பரிதாபமாக இறந்து விட்டார்.

    Advertisement

    திண்ணையில் படுத்து கிடந்த பெண்

    இதனால் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும், அறிவியல் பூர்வ ஆதாரங்களையும் ஆய்வு செய்தபோதுதான், அந்த மர்மநபர் சிக்கினார்.. அவர் பெயர் இன்னசென்ட் ரீகன்.. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர்.. ஏரியாவில் மிகப்பெரிய ரவுடியாம்.. திருட்டு மற்றும்அடிதடி கேஸ்கள் இவர் மீது இன்னமும் நிலுவையில் உள்ளது.. இவரது ரவுடித்தனத்தை பார்த்து, மனைவி இவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டாராம்..

    Advertisement

    மயங்கி கிடந்த பெண்ணை

    சம்பவத்தன்று திருட்டு தொழிலுக்காக நள்ளிரவில் தூத்துக்குடி வந்துள்ளார்.. அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் டூவீலரையும் திருடிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார்.. அப்போதுதான் வரும் வழியில் திண்ணையில் தனியாக படுத்திருந்த முத்துலட்சுமியை பார்த்துள்ளார்..

    அவரிடம் இருந்த பணத்தை பறிக்கும் நோக்கத்திலும், தவறான எண்ணத்தோடும் அணுகியபோது முத்துலட்சுமி கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த இன்னசென்ட் ரீகன், தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் முத்துலட்சுமியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்...

    இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த முத்துலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். தற்போது கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த குற்றவாளியைப் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    Advertisement

    என்ன கொடுமை இது

    சமீபகாலமாக சமூகத்தில் பெருகிவரும் குற்றச் சம்பவங்களை பார்க்கும்போது, பெற்ற தாய்க்கு சமமான முதியவர்கள் மற்றும் பாட்டிகளைக்கூடக் காமுகர்கள் விட்டு வைப்பதில்லை என்பது நெஞ்சை கலங்கடிக்கும் வேதனையாக இருக்கிறது... வயது வித்தியாசம் இல்லாமல், எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத முதிய பெண்களிடம்கூட, தங்கள் மிருகத்தனமான வக்கிரத்தை காட்டும் இதுபோன்ற மனித மிருகங்களால், பெண்கள் வீட்டின் திண்ணையில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது மனதை உறைய வைக்கிறது....!!

    English Summary

    Thoothukudi Muthulakshmi.. What Happened at Midnight After She Collapsed Outside Her Home?