அரசியலில் சிவகார்த்திகேயன், தனுஷால் விஜய்யை போல் வரவே முடியாது! அமைச்சர் கீர்த்தனா அட்டாக்!

  • விருதுநகர்: முதல்வர் விஜய் வாழும் எம்ஜிஆராக இருந்து வருகிறார். அது போல் தனுஷ், சிவகார்த்திகேயனால் ஆக முடியாது என அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விருதுநகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் விஜய் வாழும் எம்ஜிஆராகவே இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகள், திட்டங்களை பார்த்தாலே தெரிகிறது.

    Advertisement

    குழந்தைகள், பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார். வாழும் எம்ஜிஆராக இருக்க ஒரு மனம் வேண்டும். எல்லாராலும் வாழும் எம்ஜிஆராகிவிட முடியாது. மேயர் பிரியாவுக்கு எதிராக மட்டும் சமூகவலைதளங்களில் ஆபாச பேச்சுகள் நடக்கவில்லை. அவரை விட என்னை திமுகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்துள்ளனர். இதற்கு என்ன சொல்வார்? மேயர் பிரியா அந்த அவதூறுகளை திரித்து யூஸ் செய்துக் கொள்கிறார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பிரியா தெரிவித்தார்.

    தவெகவையும் முதல்வர் விஜய்யையும் அண்மைக்காலமாக மேயர் பிரியா விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அவரை தவெகவினர் சமூகவலைதளங்களில் அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிடுவதாக மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பான அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தவெக அரசு மே மாதம் முதலே மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்திருக்கிறது. சில பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை. இது குறித்து திமுக சார்பில் பல்வேறு இடங்களில் எங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.

    எனவே, இன்றைக்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், சமூக வலைத்தளங்களில் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள். தவெக அரசைக் கண்டித்துப் பேசினாலும், அந்த அரசில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்தாலும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.

    Advertisement

    ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திமுகவில் இருக்கக் கூடியவர்களுடன் என்னைத் தவறாகத் தொடர்புபடுத்தி வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்த மாதிரியான வீடியோக்கள் பொது மக்களிடையே பரவும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், மேயராகவும் பெண்ணாகவும் நான் பலமுறை இதுகுறித்து பேசியும், இன்றுவரை முதல்வர் மௌனம் காத்து வருகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    அது போல் தனுஷை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள். ரசிகர் மன்றம் சார்பில் கொடியும் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தனுஷ் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதால் அவர் அரசியல் கட்சியை பதிவு செய்ய சென்றுள்ளதாக கருத்துகள் சொல்லப்படுகின்றன.

    அது போல் சிவகார்த்திகேயனையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜொலிப்பார்களா? என்ற கேள்விக்குத்தான் அமைச்சர் கீர்த்தனா அத்தகைய பதிலை சொல்லியிருக்கிறார்.

    English Summary

    Minister Keerthana says that no one can live like MGR, but our CM Vijay alone can! She replied for Sivakarthikeyan and Dhanush's political entry claims.