வாஷிங்டன்: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் பென்ஃபோல்ட் போர்க்கப்பல் தெற்கு சீனக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக சிக்கிக்கொண்டது. இந்த கப்பலிலிருந்து அழுகிய சடலம் நாற்றம் வீசியதால்.. வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆள் பாக்கதான் பண்ணை மாதிரி.. ஆனா கை வெட்டிக்கிட்டா வச்சுக்க சுண்ணாம்பு கூட தர மாட்டாரு.. என்று நம்மூரில் சொல்வதுண்டு. அதுபோலத்தான் அமெரிக்காவும். என்னதான் உலக நாடுகளில் அமெரிக்க வல்லரசாக இருந்தாலும், தன்னுடைய மக்கள் மற்றும் ராணுவத்தை மெயின்டெயின் செய்யும் விதம் நம்மூர் பண்ணையார் மாதிரித்தான்.
யுஎஸ்எஸ் பென்ஃபோல்ட் போர்க்கப்பலுக்கு ஜப்பானில் உள்ள அமெரிக்க கட்டளை மையம்தான் ஹெட் குவாட்ரஸ். இந்த கப்பல் வழக்கமாக இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்து. இப்படி இருக்கையில் தென்சீனக்கடலில்.. சீனாவில் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், கடல் சுதந்திரத்தை உறுதி செய்ய.. இக்கப்பல் தென் சீனக்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 300 வீரர்களை கொண்ட இந்த கப்பல், சீன கடல் வழியாக பணிக்க வேண்டும். பெரியதாக மிஷன் ஏதும் கொடுக்கப்படவில்லை. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால், இடையில் திடீரென கப்பலில் மின்சாரம் சப்ளை நின்றுபோனது. ஓடும் கப்பலில் பவர் சப்ளை இல்லை எனில்.. உள்ளே இருப்பவர்களின் நிலை.. ஓவனில் இருப்பதை போன்று ஆகிவிடும். ஏசி தொடங்கி, கழிவறை வரை அனைத்துக்கும் மின்சாரம் மிக முக்கியமானது. பவர் கட் ஆனதால், மொத்த டாய்லெட்டுக்கும் தண்ணீர் கனெக்ஷென் நின்றுவிட்டது. இதனால், கடற்படை வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கழிவறையில் தண்ணீர் வராததால்.. கழிவுகள் அப்படியே தேங்கியிருக்கின்றன. இதனால் கடற்படை வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. கப்பல் முழுவதும் பிண நாற்றம் வீசுவதாகவும், உள்ளே இருக்கவே முடியவில்லை என்றும் வீரர்கள் குமுறுகின்றனர். போதாத குறைக்கு கப்பலின் என்ஜினும் மக்கர் செய்ததால்.. நடுக்கடலில் சுமார் 4 நாட்களாக 300 வீரர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலை பிலிப்பைன்ஸுக்கு இழுத்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கப்பலில் இருப்பவர்கள் எப்போடா கரையை பார்ப்போம் என்று காத்திருக்கிறார்கள். உலகத்துக்கே ராஜாவா இருந்து என்ன பிரயோஜனம்? தன் சொந்த நாட்டு போர்க்கப்பலை கூட சரியாக பராமரிக்க முடியவில்லையே? என்று கப்பலில் தவிக்கும் வீரர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.