இன்று அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்ன அலங்காரம்! காண கண்கோடி வேண்டுமே!

  • சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நாளில் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டால் 1 கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    Advertisement

    மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் அதில் மிகவும் சிறப்பு பெற்றது ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியாகும். இந்த நாளில் சிவலிங்கத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவன் அன்னம் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

    Advertisement

    அது போல் சிவராத்திரியை போன்று மிகவும் விசேஷமானது அன்னாபிஷேகம். மற்ற நாட்களை விட இந்த நாளில் சிவனை காண்பது கர்மவினையை தீர்க்கும் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் என பல்வேறு சிவன் கோயில்களிலும் இந்த அன்னாபிஷேகம் நடைபெறும்.

    Annabhishegam: நாளை ஐப்பசி அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது எப்படி?

    பெரிய கோயில்கள் என்றில்லை, வருமானத்தில் குறைந்த அளவே ஈட்டும் சிறிய கோயில்களில் கூட அன்னாபிஷேகம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி திதி நாளை 10.16 மணி வரை இருப்பதால் ஒரு சில சிவன் கோயில்களில் நாளையும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நம் வீடுகளிலும் சிவ லிங்கங்கள் இருந்தால் பச்சரிசி சாதத்தை வடித்து ஆறவைத்து அவர் மீது சார்த்தலாம்.

    English Summary

    Annabhishegam is to be celebrated in all sivan temples today at Tamil nadu.