எனக்கே தெரியாமல் இன்னும் ஃபாலோ பண்ணுகிறார்.. அனுபமா வெளியிட்ட பதிவு.. வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்

  • சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக வெளியிடும் ஒவ்வொரு பதிவுமே சோசியல் மீடியாவில் கவனம் பெறும் நிலையில் தற்போது அவர் பகிர்ந்து இருக்கும் ஒரு வீடியோ மீண்டும் பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக இது யாருக்கான பதிலடி என்ற கேள்வியைத்தான் நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    அனுபமா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ள வீடியோவில், காட்டுக்குள் மரங்களுக்கு பின்னால் ஒருவர் மறைந்து மறைந்து பார்ப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. கடைசியில் அந்த நபர் பாறைக்கு பின்னால் இருந்தும் எட்டிப் பார்க்கின்றார். இந்த வீடியோவில், நாம் போடும் போஸ்டர்களுக்கு லைக் செய்ய மாட்டார்.. கமெண்ட் செய்ய மாட்டார்.. ஆனால் உங்களுடைய ஒவ்வொரு ஸ்டோரியையும் ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் வார்த்தைகள் இருக்கிறது.

    Advertisement

    இதை பார்த்ததும் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? இந்த பதிவு யாருக்காக என்று கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். இதை ரசிகர்கள் சாதாரணமாக கடக்காத காரணம் அவர் கடந்த சில வாரங்களாக பேசி வரும் முன்னால் காதல் தொடர்பான விஷயங்கள்தான். இதற்கு முன்பு அவர் ஒரு பேட்டியில் பேசும்போது பெயரை குறிப்பிடாமல் என்னுடைய முன்னாள் காதல் உறவில் நான் பட்ட கஷ்டங்கள் என்று பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார்.

    அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவு

    அந்த உறவை அவர் "நார்சிசிஸ்டிக் அபியூஸ்" என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த உறவு ஆரம்பித்தபோது எல்லாமே சாதாரணமாக இருந்தது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கட்டுப்பாடுக்குள் என்னை வைத்துக் கொள்ள முயற்சி செய்தார். அதனால் நான் பல கஷ்டங்கள் பட்டேன். என்னுடைய சின்ன சின்ன ஆசைகளும் கனவுகளை கூட இழந்து அவருக்கு பிடித்த மாதிரியே நான் முழுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் நான் பட்ட வேதனைகள், அவர் படுத்திய அவமானங்களால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டு பதட்டம், உடல் எடை குறைதல் என பல கஷ்டங்களை சந்தித்ததாகவும் பேசி இருந்தார்.

    Advertisement

    அனுபமா பேட்டி

    தொடர்ந்து அழுததால் கண் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் அனுபமா இப்போது பகிர்ந்திருக்கும் வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை என்றாலும் நெட்டிசன்கள் அவர் விக்ரமை சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார். காரணம் விக்ரம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

    இந்த நடிகரை ஞாபகம் இருக்கிறதா? மனைவியும் நடிகை.. மகனும் சினிமா பிரபலம் தான்
    அதில் அவர் டீ குடித்தபடியே ரசிப்பது, பிறகு கதவுக்கு பின்னால் மறைந்திருந்து பார்ப்பது, ஸ்டைலாக போஸ் கொடுத்தபடியே ரசிப்பது என விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த வீடியோவை மெர்ச் செய்து பல பெண்களும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அது அந்த நேரத்தில் மீடியாவில் வைரல் ஆனது. இப்போது அனுபமா பதிவை பார்த்ததும் விக்ரமை சொல்கிறாரா அல்லது அவருடைய மகன் துருவி பற்றி சொல்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    அனுபமா காதலர்

    காரணம் துருவ்வை தான் அனுபமா காதலிக்கிறார் என்ற வதந்திகள் ஏற்கனவே பரவி இருந்தது. இருவரும் பைசன் படத்தில் நடித்த போது காதலித்ததாக அப்போது பேசப்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக ஒருவர் போடும் போஸ்ட்களுக்கு இன்னொருவர் லைக் செய்வது, கமெண்ட் செய்வது என இருந்தனர். ஆனால் இப்போது இருவரும் அன்பாலோ செய்து விட்டனர். இதனால் தான் ரசிகர்கள் அனுபமா வெளியிடும் பதிவுக்கு துருவ் விக்ரம்மை இழுக்கிறார்கள். ஆனால் அந்த பதிவில் அனுபமா துருவ் விக்ரம் அல்லது விக்ரம் பெயரை சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Anupama Parameswaran: With every recent post by actress Anupama Parameswaran garnering attention on social media, a video she has just shared is once again raising questions. Netizens, in particular, are wondering whom this post is intended to answer.