கட்சி எப்போ ஆரம்பிக்க போறீங்க என்ற கேள்விக்கு.. ரஜினிகாந்த் ஸ்டைலில் தனுஷ் பதில்!

  • சென்னை: தேசிய விருது வாங்கிய சந்தோஷத்தில் மகன்களுடன் தனுஷ் வெளியிட்ட புகைப்படம் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்க, மறுப்பக்கம் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்வி இப்போ இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. சார் கட்சி எப்போ ஆரம்பிக்க போறீங்க? என்று செய்தியாளர்கள் கேட்டதும், தனுஷ் ரஜினி ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    தனுஷ் கட்சி

    ஏற்கனவே எல்லா நிகழ்ச்சிகளிலும் ரஜினியை காப்பி பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தனுஷை சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். சமீபகாலமாக தன்னுடைய பழைய ரசிகர்கள் மன்றத்தை எல்லாம் தூசி தட்டி மீண்டும் எல்லோருக்கும் சமூக சேவையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதுவும் விஜய் வெற்றி பெற்றதும் தனுஷின் மாற்றம் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    Advertisement

    ரஜினி ஸ்டைலில் பதில்

    திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ரஜினி ஸ்டைலில் வாயை வித்தியாசமாக வைத்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் கிண்டல் செய்து கொண்டிருக்க, இப்போது செய்தியாளர்கள் தனுஷிடம் சார் கட்சி எப்போ ஆரம்பிக்க போறீங்க என்று கேட்டதும் ரஜினி போலவே ஹா.. ஹா.. ஹா என சிரித்துவிட்டு பதில் சொல்லாமலேயே கிளம்பிவிட்டார். நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற 22 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தனுஷ் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.

    தனுஷ்க்கு இரண்டு தேசிய விருது

    கேப்டன் மில்லர் படத்துக்காக சிறப்பு தோற்றத்துக்கும், ராயன் படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்பட இயக்குனருக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. விருது வாங்கிய பிறகு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களை தன்னுடைய கவனத்தை மகன்கள் ஈர்த்து விட்டதாக ஜாலியாக கேப்ஷன் கொடுத்திருந்தார்.

    Advertisement

    எப்போது கட்சி ஆரம்பம்

    ஏற்கனவே தனுஷ் தன்னுடைய ரசிகர் மன்ற செயல்பாடுகளை அதிகரித்து இருப்பதை பார்க்கும்போது அடுத்ததாக அரசியலுக்கு தனுஷ் வரப்போகிறார் என்று தான் பேசப்பட்டு வருகிறது. அதுபோலத்தான் அவருடைய கட்சி கொடி கூட சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தனர். இதுவும் கவனத்தை பெற்று வரும் நிலையில் விஜய் போல திடீரென தனது கட்சியை அறிவிக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்க, இப்போது அதற்கு பதில் சொல்லாமலேயே சிரித்து விட்டு கிளம்பி இருக்கிறார்.

    தனுஷின் அந்த சிரிப்புக்கு உண்மையில் என்ன அர்த்தம்? அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா, இல்லையா? என்பது அவரே வெளிப்படையாக சொல்லும் வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகத்தான் இருக்கிறது.

    English Summary

    While a photo Dhanush shared with his sons—celebrating his National Award win—is going viral, a question posed to him by reporters has also become a hot topic online. When asked, "Sir, when are you going to start a political party?" Dhanush responded in Rajini's signature style.