டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது!

  • சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சி Fiction மற்றும் Non-fiction நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வரிசையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களின் மனம் கவர்ந்த அதிரடியான நடனங்கள், உத்வேகம் அளித்த போட்டியாளர்களின் பயணங்கள் மற்றும் ஜோடிகளுக்கு இடையேயான அசத்தலான chemistry மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியைத் தொடர்ந்து, செப்டம்பர் 20-ஆம் தேதி பிரம்மாண்டமான grand finale-வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    Advertisement

    Dance Jodi Dance நிகழ்ச்சியில் திறமையான நடனக் கலைஞர்கள் celebrity partners உடன் ஜோடி சேர்ந்து, இந்த season முழுவதும் ரசிகர்களுக்குப் பல மறக்க முடியாத தருணங்களை வழங்கினர். ஜீ தமிழில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, எனர்ஜிடிக் பெர்பார்மன்ஸ் ஜோடிகளின் அழகான கெமிஸ்ட்ரி மற்றும் கிரியேட்டிவ் டான்ஸ் என ரசிகர்களைத் தொடர்ந்து ரசிக்க வைத்தது.

    Advertisement

    பைனல் போட்டியாளர்கள்

    போட்டி grand finale-வை எட்டிய நிலையில், கோமதி & கென்னி, அருணிமா & அபிஷேக், ஷாலினி & பிரிட்டோ, சாண்ட்ரா & கஜினி, நிகிதா & நவீன் ஆகிய டாப் 5 ஜோடிகள் மேடையில் தங்களது அசத்தலான பெர்பாமென்ஸ் மூலம் வெற்றிக் கோப்பைக்கான போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கினர்.

    இந்த சீசனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்தவர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடுவர்களான பிரசாந்த், சிம்ரன் மற்றும் சினேகா தங்களது தனித்துவமான ஆளுமை, அனுபவம் மற்றும் கலகலப்பான எனர்ஜியால் நிகழ்ச்சியை அவர்கள் மேலும் சிறப்பாக்கினர். ஒவ்வொரு பெர்பார்மன்ஸ்க்கும் அவர்கள் வழங்கிய feedback மற்றும் மோட்டிவேஷன், போட்டியாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது திறமையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவியது.

    Advertisement

    அதேபோல், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மணிமேகலை மற்றும் அசார் ஜோடி, தங்களது கலகலப்பான பேச்சுக்கள் மூலம் season முழுவதும் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் கூட்டினர். போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் பயணத்தை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றினர்.

    இந்த சீசன் திறமை, விடாமுயற்சி மற்றும் நடனத்தின் மீதான தீராத காதலைக் கொண்டாடிய அழகான மேடையாக அமைந்தது. பிரம்மாண்டமான பெர்பார்மன்ஸை தாண்டி, போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணங்களையும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, ஒவ்வொரு பெர்பார்மன்ஸிலும் தங்களை மேம்படுத்திக் கொண்ட போட்டியாளர்களின் அர்ப்பணிப்பும் உணர்ச்சிப்பூர்வமான பயணமும் இந்த சீசனை ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது.

    Advertisement

    கிராண்ட் பினாலே மேடையில் ஐந்து ஜோடிகளும் தங்களது மிகச் சிறந்த பர்பாமென்ஸை வழங்கி அசத்தினர். பிரம்மிக்க வைக்கும் choreography, creativity மற்றும் உணர்வுகள் என ஒவ்வொரு ஜோடியும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியதால், கடைசி நிமிடம் வரை போட்டி பரபரப்பாகவே நீடித்தது.

    டான்ஸ் ஜோடி டான்ஸ் வெற்றியாளர்கள்

    இந்த விறுவிறுப்பான போட்டியின் முடிவில், சிறப்பான டான்ஸ் பெர்பார்மன்ஸ் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற கோமதி & கென்னி, வெற்றியாளர்களாக மகுடம் சூடினர். நிகிதா & நவீன் முதல் ரன்னர் ஆகவும், அருணிமா & அபிஷேக் இரண்டாவது runners-up ஆகவும் இடம்பிடித்தனர். இவர்களும் தங்களது energy, திறமை மற்றும் அசத்தலான Perfomance மூலம் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தனர்.

    Advertisement

    வெற்றியாளர்களின் பேட்டி

    தங்களது வெற்றி குறித்து கோமதி & கென்னி கூறுகையில், "Dance Jodi Dance வெற்றியாளர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பது எப்போதும் மறக்க முடியாத, மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணம். இந்தப் பயணம் எங்களுக்குப் பல சவால்களைக் கொடுத்ததோடு, performers-ஆக எங்களை இன்னும் வளர்த்திருக்கிறது. அதேசமயம் ஏராளமான மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்திருக்கிறது. இந்தப் பயணம் முழுவதும் எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்த நடுவர்கள், ரசிகர்கள் மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

    பிரம்மாண்டமான grand finale-வுடன் இன்னொரு பரபரப்பான சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் திறமை, விடாமுயற்சி மற்றும் நடனத்தின் மீதான காதலைக் கொண்டாடிய அழகான நினைவுகளை விட்டுச் செல்கிறது. தொடர்ந்து புதிய திறமைகளையும், ரசிகர்களை ஈர்க்கும் கதைகளையும் ஜீ தமிழ் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு பெர்ஃபார்மன்ஸ்க்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது; ஒவ்வொரு பயணமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை Dance Jodi Dance இந்த சீசன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

    Advertisement

    இந்த நிகழ்ச்சி மூலம் போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை கோவை சூர்யா வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு திருநங்கை, திருநம்பிகளுக்காக விடுதிகளை கட்டித் தருவதாக அறிவித்தது. அதேபோல் போட்டியாளர் ஷாலினியின் மகனுக்கு முறையான சிகிச்சை அளித்து அவன் அம்மா என அழைத்த அழகிய தருணமும் இந்த மேடையில் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Dance Jodi Dance: Zee Tamil has been entertaining viewers with a variety of fiction and non-fiction programs. Among them, the show 'Dance Jodi Dance' garnered immense popularity thanks to captivating dance performances, the inspiring journeys of the contestants, and the fantastic chemistry between the dance partners. Following weeks of spirited competition, the show concluded with a spectacular grand finale on September 20th.