சென்னை: நடிகர் ஜெயமணியின் மறைவு சின்னத்திரை மற்றும் திரைப்பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக அவர் நடித்த சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
நடிகர் ஜெயமணி மறைவு
அதில், "நடிகர் ஜெயமணி மறைந்தார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல இருக்கு... நெஞ்சம் தாங்கவில்லை... எனது நண்பரான அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகை சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்வரையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று டி ராஜேந்தர் உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகர் ஜெயமணி பல வருஷங்களாக சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலிலும் மலேசியா மாமாவாக தன்னுடைய நடிப்பால் இன்றைய தலைமுறைக்கும் பரீட்சையமான நபராக மாறி இருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த சீரியலில் பூங்காவனம் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு மெட்டிஒலி உட்பட பல சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் 40 சீரியல்களை இயக்கி இருக்கிறார். 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.. வருத்தத்தில் சின்னத்திரை உலகம்டி ராஜேந்தர் பதிவு
திருமதி செல்வம் சீரியல் பூங்காவனம்
சக நடிகர்களிடமும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் அன்பும், மரியாதையும் பெற்றவராக இருந்திருக்கிறார். அதனால் தான் அவருடைய மறைவு செய்தியை கேட்டதும் சோசியல் மீடியாவில் பலரும் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். டி ராஜேந்தரின் உணர்வுபூர்வமான பதிவு ஜெயமணியுடன் இருந்த நட்பின் ஆழத்தை காட்டியதோடு ஒரு கலைஞரை இழந்த வேதனையை திரை உலகமே பகிர்ந்து கொள்கிறது என்பதை உணர்த்தி இருக்கிறது.