லைக் மோகம்.. கேமரா முன்பு கட்டி பிடித்து உதட்டு முத்தம்.. ரீல்ஸில் எல்லை மீறுவது தான் காதலா?

  • சென்னை: காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த தனிப்பட்ட தருணத்தையே கேமரா வைத்து வீடியோ எடுத்து, எடிட் செய்து லட்சக்கணக்கானவர் பார்க்கும் வகையில் ரிலீஸாக வெளியிட்டால் அப்போ இது எதற்கு பிரைவேட்? என்று கேள்வி வரதானே செய்யும். அப்படித்தான் தற்போது ஒரு ஜோடியின் ரீல் வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது.

    Advertisement

    வைரலாகும் அந்த வீடியோவில் கல்யாணம் முடிந்ததாக கூறப்படும் ஒரு ஜோடி தனியாக ஒரு அறைக்குள் செல்கின்றனர். கதவை மூடிக்கொண்ட பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வீடியோவில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் தருணங்கள் தான் இப்போ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. வீடியோவுக்கு மேலே "That hug the marriage is over" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    வைரல் வீடியோ

    மேலும் காதல், திருஷ்டி போன்ற எமோஜிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீடியோவை பார்த்தால் இது ஒரு தனிப்பட்ட தருணம் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு இருவரும் கேமராவை பொறுப்பெடுத்தாமல் கட்டிப்பிடித்து, உதட்டில் முத்தம் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கே கேமரா எப்படி வந்தது? அதுதான் நெட்டிசன்களின் கேள்வி.

    அன்பை காட்டுவதில் தப்பில்லை. ஆனால் யாருக்காக இவர்கள் இப்படி கேமரா முன்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்? என்பது தான் அனைவருடைய கேள்வி. காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் கட்டிபிடிப்பதும் அன்பை வெளிப்படுத்துவதும் இயல்பான விஷயம்தான். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சோசியல் மீடியாவில் போட வேண்டுமா? என்பதுதான் இங்கே பேசப்படும் விஷயம்.

    Advertisement

    பார்வையாளர்கள் எதற்கு

    நம்முடைய தனிப்பட்ட விஷயத்தை அந்த பங்க்ஷனுக்கு வந்தவர்கள் யாரும் பார்க்க கூடாது என்பதற்காக அந்த தம்பதி ரூமுக்குள் வரும்போது கதவை பூட்டி கொள்கிறார்கள். ஆனால் அந்த ரூமுக்குள் நடந்ததை மட்டும் உலகமே பார்க்கும்படி ரீல்ஸில் போடுறாங்களே இது என்ன லாஜிக்? என்று சிலர் கலாய்க்கிறார்கள். மேலும் சிலர் காதல் இருக்கட்டும், அந்த காதலருக்கு பார்வையாளர்கள் எதற்கு? நீங்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதில் யார் பெஸ்ட் என்று பார்வையாளர்கள் சொல்வதற்காக நீங்கள் ரிலீஸ் வீடியோ வெளியிட்டுறீங்களா? என்றும் கேட்கிறார்கள்.

    எல்லாமே கண்டெண்ட்

    எல்லாவற்றையும் கண்டன்ட் ஆக்க வேண்டுமா? இப்பதெல்லாம் ஒரு முக்கியமான மாற்றம் வந்துவிட்டது முன்பு வீட்டில் நடந்த சந்தோஷத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டோம் இப்போது அதையே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு எத்தனை லைக் வந்தது? எத்தனை ஷேர், கமெண்ட் வந்தது என்று பார்க்கிறோம். நிச்சயதார்த்தம், முதல் சந்திப்பு, திருமணம், காதல், முதல் பயணம், சண்டை, சமாதானம் என எல்லாமே கன்டென்ட் ஆகிவிட்டது. ஆனால் ஒரு விஷயம் மறந்து விடக்கூடாது கேமரா ஆப் ஆன பிறகு சந்தோஷமாக இருக்கக்கூடிய வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை.

    Advertisement

    ரீல்ஸில் ஆயிரம் பேர் பார்த்து Cute Couple என்று கமெண்ட் போடுவது ஒரு பக்கம், அந்த ஆயிரம் பேரும் இல்லாத நேரத்தில் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையும் புரிதலும் அன்பும் தான் இன்னொரு பக்கம். அதுதான் முக்கியம். ரீல்ஸ் போடாதீங்கன்னு யாரும் சொல்லவில்லை. அன்பை வெளிப்படுத்தாதீர்கள் என்றும் யாரும் சொல்லவில்லை. ஆனால் எது நமக்குள் மட்டும் இருக்க வேண்டும்? எதை உலகத்திடம் பகிர வேண்டும்? என்று ஒரு சிறிய எல்லை இருந்தால் நல்லது.

    இதை மட்டும் செய்யவும்

    இன்று வைரலாக வேண்டும் என்பதற்காக எடுத்த வீடியோ நாளைக்கு நமக்கே சங்கடமாக மாறக்கூடும். அதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அழகான தருணங்களை எல்லாம் கண்டாக மாற்றிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கையை நாமே பார்வையாளர்களுக்காக வாழ ஆரம்பித்து விடுவோம். அதனால் காதலியுங்கள், கொண்டாடுங்கள், கட்டிப்பிடிங்கள், சந்தோஷமாக இருங்கள். ஆனால் சில சந்தோஷங்களை கேமராவுக்கு காட்டாமல் உங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டால் அந்த சந்தோஷத்துக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பு இருக்கும்.

    Advertisement

    English Summary

    reels: Hugging and kissing while in a relationship is a personal matter. However, if that very private moment is filmed, edited, and released for hundreds of thousands of people to see, it naturally raises the question: "In what sense is this private?" A "Reel" video featuring a couple has recently garnered attention on social media for this very reason.