சென்னை: இசையமைப்பாளர் தேவா காலமாகி சில நாட்கள் கடந்து விட்டாலும் அந்த சோகத்தில் இருந்து அவருடைய ரசிகர்களும் குடும்பத்தினரும் இன்னும் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா கையெடுத்து கும்பிட்டபடி உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் முதல்வர் விஜய்க்கும், தமிழ்நாடு காவல்துறையினருக்கும், தேவாவின் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா வீடியோ
இசையமைப்பாளர் தேவா இறந்து சில நாட்களே ஆன நிலையில் அவருடைய தம்பி மகனும் காலமாகிவிட்டார். கடந்த வருடம் தம்பி இறந்த சமயத்திலேயே தேவா உடைந்து போய் இருந்தார். அடுத்தடுத்து அவருடைய குடும்பத்தில் நடக்கும் அதிர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்தாலும் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா உருக்கமாக பேசி இருக்கிறார். அதில், அப்பா இல்லை என்பதை இன்னும் எங்களால ஏத்துக்க முடியல.
அவர் இல்லை என்பதை நம்பாமல் மனம் துடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் மக்கள் அவர் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அப்பாக்காக முதல்வர் விஜய் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்ய அறிவித்திருந்தார். 40 வருஷங்களாக அப்பா செய்த பணிக்காக அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது, எங்களுக்கு என்ன சொல்றது என்றே தெரியவில்லை. அது போல காவல்துறையினர்கள் எங்களுக்கு ரொம்பவே சப்போர்ட் கொடுத்தாங்க. ஆரம்பத்தில் இருந்து முழுக்க அவர்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து அனைத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் விஜய் சார் நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னாரு. என்னிடமும் என் அக்காவிடமும் பேசும்போது இப்படி நடக்கும்னு நானே நம்பவே இல்லை, இதை கொஞ்சம் கூட என்னால ஏத்துக்க முடியவில்லை என்ற சொன்னாரு. அதுபோல அவர் காருக்கு போகும் போது கூட என்கிட்ட, எந்த பிரச்சனை என்றாலும்.. என்ன வேண்டும் என்றாலும் உடனே சொல்லு என்று சொன்னாரு. எனக்கு அதை மறக்க முடியாது. மக்கள் அப்பாவை பற்றி இவ்வளவு பேசுகிறார்கள், அதை எல்லாம் கேட்கும் போது எனக்கு கண் கலங்குகிறது என்று கையெடுத்து கும்பிட்டபடி அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் 40 வயதிற்கு பிறகுதான் தனது வாழ்க்கையே மாறியது, அதனால் யார் கஷ்டப்பட்டாலும் பயப்படாதீங்க சினிமாவில் எப்படி செகண்ட் ஹாஃப் சூப்பராக இருந்தால் படம் ஹிட்டாகி விடுமோ அதே போல உங்களுடைய வாழ்க்கையிலும் மாற்றம் வரும் என்று தன்னம்பிக்கையாக பேசியவர். அதுபோல தன்னுடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்துவதற்கு என்கிட்ட அவங்க அனுமதியே கேட்கவில்லை என்றாலும் நான் உங்களுக்கு காப்பிரைட் கேட்க மாட்டேன், இப்போது உள்ள தலைமுறைகளும் என் பாட்டை கேக்குறாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று பெருந்தன்மையாக பேசியவர். எப்போதும் சாந்தமாகவும், மோட்டிவேஷனாகவும் பேசியவர். அவருக்கு திடீரென இப்படி ஒரு மரணமா என்பதுதான் அனைவருடைய வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த சோகத்தில் இருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.அனைவருக்கும் நன்றி
முதல்வர் விஜய் சொன்ன வார்த்தை
இசையமைப்பாளர் தேவாவின் பெருந்தன்மை