விஜய் சேதுபதி பயங்கரமான அறிவாளி.. ஆனால் பேச்சு? அட்லீ சொன்ன விஷயம்.. அதிருப்தியில் மக்கள் செல்வன்

  • சென்னை: விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்தை தயாரிக்கும் அட்லீ பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பற்றி பேசியதுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல பத்தா நிகழ்ச்சியில் விஜய் பற்றியும் ரொம்பவே பெருமையாக அட்லீ பேசியிருந்தார். உடனே விஜய் ரசிகர்கள் இதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    Advertisement

    போன வாரம் சனிக்கிழமை விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வார சனிக்கிழமையான இன்று விஜய் சேதுபதிக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி அட்லீ பேசிய வீடியோ தான் இப்போ சோசியல் மீடியாவில் செம வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த வீடியோக்களை பகிர்ந்து விஜய் சேதுபதியை கலாய்க்கிறார்கள். அப்படி என்னதான் அவர் பேசிவிட்டார் என்று பார்த்தால் விஜய் சேதுபதி புகழ்வது போல தான் பேசி இருக்கிறார். ஆனால் அதை இரண்டு அர்த்தத்திலும் எடுக்க முடியும். இது புகழ்ச்சியா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? என்பதுதான் இப்ப கேள்வியாக இருக்கிறது. சரி என்ன பேசினார் என்று பார்க்கலாம்.

    Advertisement

    விஜய் சேதுபதி பற்றி அட்லீ பேச்சு

    அதாவது, விஜய் சேதுபதி பயங்கரமான அறிவாளி. ஆனால் அவருடைய பேச்சு தான் நம்மை மயக்கிவிடும். அந்த அளவிற்கு அவர் பேசுவார். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோணும். சில நேரங்களில் அவர் பேசுவது குழப்பத்தையும் ஏற்படுத்தும், அது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்க்கும்போது லைஃப் டைம் ப்ராஜெக்ட் என்று தோணும் அதே மாதிரி தான் இவரு எடுக்குற எல்லா படமும் லைஃப் டைம் படமா இருக்கிறது.

    கிடைத்த வாய்ப்பு

    மகாராஜா படத்தை பாருங்க. அதற்குப் பிறகு அவர் எடுக்கிற ஒவ்வொரு படத்தையும் பாருங்க. அவர் எடுக்கிற படங்கள் ஜெயிக்குதோ இல்லையோ அது வேற கதை. ஆனால் அதில் ஒரு வித்தியாசமான கதை இருக்கும். அவர் எந்த படத்துக்கும் சோர்ந்து போக மாட்டாரு. உழைச்சுட்டே இருப்பாரு. இப்படி பட்டவர் கூட சேர்ந்து உழைக்கிறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த மூளைக்குள்ள எப்படி ப்ராசஸ் நடக்குது? எப்படி இவர் யோசிக்கிறாரு என்று நானும் புரிந்து கொண்டேன்.

    Advertisement

    ஒரு நாள் நாங்க கதை பேசிக் கொண்டிருக்கும் போது ஜவான் படத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போ இந்த கதையை கேட்டதும் எனக்குள் இதை நாம பண்ணியே ஆகணும் என்று தோன்றியது. அவர் இதை வெற்றிமாறன் கிட்ட சொல்லலாம்னு இருக்கேன் ஆனால் இது கமர்சியல் படம் என்பதால நீ எடுத்தா நல்லா இருக்கும் என்று சொன்னாரு. உடனே நான் சார் நல்லா இருப்பீங்க அவர் கிட்ட கொடுத்துற வேண்டாம் என்கிட்டயே கொடுங்க நான் பாத்துக்குறேன் என்று சொன்னேன்.

    விஜய் சேதுபதி ரியாக்ஷன்

    தேங்க்ஸ் அண்ணே நீங்க இல்லன்னா அந்த படம் நடந்திருக்காது என்று விஜய் சேதுபதிக்கு அட்லீ நன்றி சொல்லியிருந்தார். அதற்கு முன்பு விஜய் பற்றி அவர் அவ்வளவு பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். சோசியல் மீடியாவில் அவர் இவரை சொல்கிறார், இவர் அவரை சொல்கிறார்... என்று ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க ஆனால் யாரை பற்றி சொல்ல வேண்டும் என்றாலும் நேரடியாக பேசிவிடலாம். விஜய் அண்ணாவால் தான் சட்டமன்றத்தை 5 வயது குழந்தை கூட கவனிக்கிறது. இனி அவரால் ஒரு வலிமையான அரசியல் உருவாகும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    அப்போது விஜய் சேதுபதி முகத்தில் சிறிதளவும் சிரிப்பில்லாமல் ஒருவித அழுத்தத்தோடு அட்லீ பேசுவதை கவனித்து கொண்டே இருந்தார். அதற்கு பிறகு விஜய் சேதுபதியை பற்றி அட்லீ பேசிக் கொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் அதே ரியாக்ஷன் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் தான் விஜய் சேதுபதி சந்தோஷம் என்பது போல லேசாக சிரித்துக்கொண்டார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இப்போ சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி விஜய் சேதுபதி பேசியதற்கு ஒரு வாரமாக அவரை போட்டு அடிச்சிங்களே அவர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன பேச போகிறார் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கிறார்கள்.

    Advertisement

    ஒரு பக்கம் விஜய் சேதுபதிக்கு அட்லீ கொடுத்த பதிலடி என்ற ஹேஸ்டேக் மற்றும் வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து கவனிங்க என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். சரி எப்படியோ லீடர்ஷிப் பிரச்சனை இந்த வாரத்தோடு முடியாது போல.

    English Summary

    Vijay Sethupathi: Atlee, the producer of the film Baththa (starring Vijay Sethupathi), has gone viral online for his remarks about Vijay Sethupathi at the film's audio launch event. He also spoke very highly of Vijay during the same event. Vijay's fans immediately shared the clips, causing them to go viral.