நிலைமை அந்த அளவிற்கு மோசம்.. கேரளாவிற்கே வந்த டிரம்ப்பின் மருமகன்.. அப்படி என்ன நடந்தது?

  • திருவனந்தபுரம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளான டிஃப்பனி டிரம்பின் கணவரும், பிரபல தொழிலதிபருமான மைக்கேல் பூலோஸ் சனிக்கிழமை காலை கேரளா மாநிலம் கொச்சிக்கு தனிப்பட்ட பயணமாக வருகை தந்தார். ஆனால் இந்த பயணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

    Advertisement

    வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத் திருத்தம் (FCRA) தொடர்பான விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள வேளையில், அமெரிக்க அதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபரின் இந்த வருகை.. அதுவும் கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள மாநிலத்திற்கு வந்துள்ளது.. அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    Advertisement

    அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நெருங்கிய நண்பரான மைக்கேல் பூலோஸ், நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேரடியாக இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழைக்குச் சென்றார்.

    ஆலப்புழை படகு சவாரியும் சுண்டன் வள்ளப் பயிற்சிப் பார்வையும்

    ஆலப்புழையில் உள்ள வேம்பநாடு ஏரியில் சொகுசு ஹவுஸ்போட் மூலம் சுமார் இரண்டரை மணி நேரம் பயணங்களை மேற்கொண்டனர். கேரளா மாநிலத்தின் புகழ்பெற்ற நேரு டிராபி படகுப் போட்டிஆகஸ்ட் 22 அன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான படகுகளில் செய்யப்படும் பயிற்சிப் போட்டியைக் காண பூலோஸ் விருப்பம் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த பாரம்பரிய படகுப் போட்டிப் பயிற்சியை அவர் ஆர்வத்துடன் கண்டுகளித்தார். மைக்கேல் பூலோஸ் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நெருங்கிய நண்பர் என்றும், தனது நண்பரைச் சந்திக்க அவர் இந்தியாவுக்கு வருகை தருவது இது இரண்டாவது முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சர்ச்சை

    வெளிநாடு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா (FCRA), 2026 என்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. இதை தற்போது அமெரிக்காவும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்க தொடங்கி உள்ளனர். இந்த மசோதா கிறிஸ்தவ அமைப்புகளையும் தேவாலயங்களையும் பாதிக்கும்.. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களை பாதிக்கும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

    Advertisement

    இந்த மசோதாவானது வெளிநாட்டு நிதியுதவிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும், சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான விதிகளையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை எழுப்பி வருகின்றன.

    தொண்டு நிறுவனங்களுக்கும், சிவில் சமூக அமைப்புகளுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளைத் தடுப்பதற்காகவே இந்தியா இந்த புதிய சட்டத்தை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா வைக்கிறது. முக்கியமாக கிறிஸ்துவ தொண்டு அமைப்புகளுக்கு பணம் வருவதை தடுக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள கிறிஸ்துவர்களும், முக்கியமாக கேரளாவில் உள்ள தொண்டு அமைப்புகள் இதை கடுமையாக எதிர்க்கின்றன. இதற்கு இடையேதான் டிரம்ப் குடும்பத்தினர் கேரளா வந்துள்ளனர்.

    Advertisement

    கேரள முதலமைச்சருடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

    மைக்கேல் பூலோஸின் இந்தப் பயணத்தின் இடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனைச் சந்தித்துப் பேசினார். மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

    குறிப்பாக, உயர் கல்வி, சுற்றுலா, கலாச்சாரம், முதலீடுகள் மற்றும் கடல்சார் வளர்ச்சி ஆகிய துறைகளில் அமெரிக்காவிற்கும் கேரளாவிற்கும் இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை முதலமைச்சர் வி.டி. சதீசன் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    FCRA 2026 சர்ச்சைக்குரிய சட்டம் என்றால் என்ன?

    ஏற்கனவே நாடு முழுவதும் FCRA (Foreign Contribution Regulation Act) Amendment Bill, 2026 பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

    வெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் சட்டம் (FCRA) என்பது இந்தியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கண்காணித்து முறைப்படுத்தும் ஒரு மத்திய சட்டமாகும்.

    2026 திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் சர்ச்சைகள்

    1. வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியின் ஆதாரங்கள், பயன்பாடு மற்றும் அதன் இறுதிப் பயனாளி குறித்த விவரங்களை அரசாங்கத்திடம் மிகவும் துல்லியமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
    2. கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் அனுமதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
    3. இந்த புதிய திருத்தங்கள் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

    அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் FCRA 2026 சட்டத் திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளின் இந்தக் கேரள வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Donald Trump’s Son-in-Law Michael Boulos Visits Kerala Amid FCRA Controversy