விடிஞ்சதும் இதே பொழப்பு.. தவெக அரசை திட்டாவிடின் விசிக, காங். தலைவர்களுக்கு சாப்பாடு இறங்காது.. வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணி உருவாகி சில மாதங்களே ஆகிறது. அதற்குள் ஏராளமான சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. விசிக, காங்கிரஸ் நிர்வாகிகளே தவெக அரசை தினசரி விமர்சிக்கிறார்கள். தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் காலை சூரியன் உதித்த உடனே விசிக, காங்கிரஸ் தவெக அரசை விமர்சிக்கிறது. அந்த தலைவர்களுக்கு தவெகவை விமர்சிக்காவிடின் காலை சாப்பாடு இறங்காது என வைகோ விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், முன்னாள் துணை முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் ஒரு அடைமொழி கொடுத்து இந்த ஆட்சியை விமர்சிக்கிறார். அவர் பெரிய கவிஞர் அல்ல. அதனால் அப்படித்தான் விமர்சிப்பார். எங்கள் ஆட்சியில் காவல்துறை கம்பீரமாக நின்றது என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இந்த ஆட்சியில் காவல்துறை கேவலப்பட்டு நிற்கிறது என்று கூறுகிறார். அவர்கள் ஆட்சியில் எங்கும் அமைதி நிலவியதாம்.

mdmk-vaiko-slams-vck-and-congress-parties

விடிந்தால் இதே வேலை

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காவல்நிலைய மரணங்கள், சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. இந்த ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் இருக்காது. சர்கஸ் கூடாரம் ஆட்சி, கோமாளி ஆட்சி, உருப்படாத ஆட்சி என விமர்சிக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல கூட்டணியில் உள்ளவர்களே பொழுது விடிந்தவுடனே அரசை விமர்சிக்க தொடங்குகிறார்கள். ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள இரண்டு கட்சி தலைவர்களே விமர்சிக்கிறார்கள்.

தினமும் சூரியன் விடிந்தால் போதும் ஜோசப் விஜய் ஆட்சியை அட்டாக் செய்யாமல் அவர்களுக்கு காலை சாப்பாடு இறங்காது. தினமும் அட்டாக் செய்கிறார்கள். அமைச்சரவையில் இருந்து கொண்டே இதை செய்கிறார்கள். மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் தான் தவெக அரசை விமர்சிப்பதில்லை. இந்த ஆட்சியை பற்றி சொல்கிறீர்களே. அமெரிக்காவில் வாட்டர் கேட் ஊழல் பற்றி தெரியுமா.

காவல்துறைக்கு பாராட்டு

ஜனநாயக கட்சிக்கு சென்ற தகவலை ஒட்டு கேட்டதாக பதவி இழந்தள்ளார்கள். இப்போது எல்லாமே நாசமாக போச்சு என்று சொல்கிறார்கள். சிறையில் இருந்த ரவுடி கைதிகள் ராத்திரி தப்பித்து சென்றார்கள். 14 மணி நேரத்தில் காவல்துறை அனைத்து கைதிகளையும் பிடித்துவிட்டது. காவல்துறைக்கு ஹேட்ஸ் ஆப். இதற்காக நான் காவல்துறையை மனமார பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார். வைகோவின் பேச்சு தவெக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+