பாடி லேங்குவேஜில் வடிவேலுவே தோற்றார்! செம எக்ஸ்பிரஷன் கொடுத்த கேரளா முதல்வர்! வைரலாகும் சதீஷன்!

  • திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மற்றும் பைக் மாடிஃபிகேஷன் (Vehicle Modifications) செய்யும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நீண்ட நாள் கனவுக்கு, அம்மாநில புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன் தனது ஸ்டைலான புன்னகையின் மூலமே பாதிப் பதிலைக் கொடுத்து புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

    Advertisement

    தேர்தல் வாக்குறுதியான வாகன மாற்று வடிவமைப்புகளைச் சட்டப்பூர்வமாக்குவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் கொடுத்த சுவாரசியமான முக பாவனைகளும் (Body Language) அதிரடி பதில்களும் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

    Advertisement

    முகத்தில் தவழ்ந்த புன்னகை... மனதில் ஒளிந்திருந்த க்ரீன் சிக்னல்!

    செய்தியாளர்கள் "வாகன மாடிஃபிகேஷன் எப்போது சட்டப்பூர்வமாக்கப்படும்?" எனக் கேள்வி எழுப்பியதும், முதல்வர் வி.டி. சதீசன் எவ்விதத் தயக்கமும் இன்றி, தன் முகத்தில் ஒரு நெகிழ்ச்சியான புன்னகையை வெளிப்படுத்தினார். அந்த ஒற்றைப் புன்னகையிலேயே, இந்த விவகாரத்தில் அரசு இளைஞர்களின் பக்கமே நிற்கிறது என்பதை அவர் சூசகமாக உணர்த்திவிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களுடன் இச்சிக்கல் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    "வெறும் வாக்குகளுக்காக அல்ல" - தீர்க்கமான பார்வை, கம்பீரமான வார்த்தைகள்!

    அடுத்த நொடியே, முகத்தில் ஒரு மக்கள் பிரதிநிதிக்கே உரிய தீவிரத்தையும் தீர்க்கத்தையும் வரவழைத்துக் கொண்டு முதல்வர் வி.டி. சதீசன் பேசிய வார்த்தைகள் வாகன ஆர்வலர்களுக்குப் பெருத்த நம்பிக்கையை அளித்துள்ளது.

    Advertisement

    அவர் கூறியதாவது: "நாங்கள் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே நாங்கள் இங்கே இருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்களின் கனவுகளையும் விருப்பங்களையும் நனவாக்கவே மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் இந்தத் தகுதியில் அமர்ந்துள்ளோம். வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை!"

    இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் காட்டிய இந்த உறுதியான ரியாக்ஷன், கேரள வாகன உலகையே அதிர வைத்துள்ளது.

    MVD-யின் கெடுபிடிகளும்... 'மாட்ஸ் ஓன் கன்ட்ரி'யின் நிம்மதியும்!

    நெட்டிசன்களால் அன்போடு 'மாட்ஸ் ஓன் கன்ட்ரி' (Mods Own Country) என்று அழைக்கப்படும் கேரளாவில், தனித்துவமான வாகன வடிவமைப்புகள் எப்போதும் டாப் கியரில் இருக்கும். ஆனால், கேரள மோட்டார் வாகனத் துறை (MVD) எப்போதுமே இம்மாற்றங்கள் மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு, அதீத அபராதங்களை விதித்து வந்தது.

    Advertisement

    இந்தச் சூழலில், "பாதுகாப்பான மாற்றங்களுக்கு அனுமதி உண்டு" என முதல்வர் காட்டிய கனிவான அணுகுமுறை, சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து தங்களது திறமையை முடக்கி வைத்திருந்த வாகன ஆர்வலர் சமூகத்திற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    சட்டச் சவால்களும், எதிர்பார்ப்புகளும்

    மாநிலக் கட்டமைப்பு தேவை: மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகன மாற்றங்கள் பொதுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, முதல்வர் சதீசன் தனது முகபாவனைகளில் காட்டிய அந்தப் பாசிட்டிவ் ரியாக்ஷனை நிஜமாக்க வேண்டுமானால், மாநில அளவில் ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

    தெளிவான வரையறை: 'பாதுகாப்பான மாற்று வடிவமைப்பு' என்பது எதைக் குறிக்கிறது என்பதை அரசு தெளிவாக வரையறுத்து குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

    Advertisement

    முதலமைச்சர் வி.டி. சதீசன் காட்டிய அந்தப் 'புன்னகையும்-உறுதியும்' கலந்த ரியாக்ஷன், வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அரசாணை வெளியானால், அது கேரள வாகனத் துறையில் ஒரு வரலாற்றுத் தருணமாக மாறும்.

    இந்த பேட்டியின் போது செய்தியாளர்களின் கேள்விக்கு சதீஷன் கொடுத்த முகபாவனைகள் வைரலாகி வருகின்றன. பாடி லேங்குவேஜில் வடிவேலுவையே மிஞ்சிவிட்டார் என்கிறார்கள்.

    English Summary

    V. D. Satheesan has triggered fresh discussions among Kerala’s automobile enthusiasts after his stylish smile and subtle response raised hopes about easing vehicle modification rules. The development has excited lakhs of youngsters involved in car and bike modification culture across the state.