கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள்
திரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கவும், தொழில் செய்யவும் பணிபுரியவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
2021ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற்ற பொழுது இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். அதன் பின்னர் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசாவை வழங்கி சிறப்பித்து இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
இதேபோல, மலையாள திரையுலகில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்திவிராஜ் உள்ளிட்டோருக்கும் இதற்கு முன்னர் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
https://twitter.com/rparthiepan/status/1474094516869074945
சரி, கோல்டன் விசா என்றால் என்ன? யாருக்கெல்லாம் இது வழங்கப்படும்? அதனால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
'கோல்டன் விசா' என்பது வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கும் ஒரு கௌரவம் ஆகும்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் மிக்க திறன் பெற்றவர்கள், அறிவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், திறன்மிக்க மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதாபிமான சேவையாற்றுவோர் உள்ளிட்டோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
10 ஆண்டுகாலம் செல்லுபடி ஆகக்கூடிய, தங்கும் அனுமதியான ரெசிடென்ஸ் விசாவும் இதன் மூலம் கிடைக்கும். 10 ஆண்டுகாலம் முடிந்த பின்னர் இதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
https://twitter.com/vp_offl/status/1536384719952044032
வழக்கமாக வேறு விசாக்கள் வாங்குபவர்களுக்கு அவர்களைப் பணியமர்த்துவோர் ஸ்பான்சராக இருப்பர். ஆனால், கோல்டன் விசா பெறுபவர்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை.
ரெசிடென்ஸ் விசா பெற்றவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு மேல் அந்நாட்டுக்கு வெளியே வசிக்க முடியாது. அப்படி வசித்தால் அந்த விசா காலாவதியாகிவிடும்.
ஆனால் கோல்டன் விசா பெற்றவர்கள் ஆறு மாத காலத்துக்கு மேலும் ஐக்கிய அமீரகத்துக்கு வெளியே தங்கலாம்.
கோல்டன் விசா பெற்றவர்கள் தங்களது குடும்பத்தினரையும் அந்நாட்டில் தங்க வைப்பதற்கு ஸ்பான்சர் செய்யலாம்.
கோல்டன் விசா செல்லுபடியாகும் காலம் முழுமைக்கும் இதை பெற்றுள்ளவர்களின் குடும்பத்தினர் அங்கு தங்கிக் கொள்ளலாம். இவர்கள் தங்கள் வீட்டுவேலைகளுக்காக, இத்தனை பணியாளர்களைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இவர்களுக்கு கிடையாது.
https://twitter.com/sri50/status/1542364560299925504?s=20&t=922p83qz3_YNr3AEYRH6Gg
நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா பெற தகுதியானவரா என்பதை இந்த இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு கோல்டன் விசா வாங்க பரிந்துரைக் கடிதம் வேண்டும் என்றால் இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
https://www.youtube.com/watch?v=_AFCcysmUiY&t=1s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications