11.12.13: மற்ற நாட்களைப் போல் இன்றும் மற்றொரு நாளல்ல...
11.12.13 தினக் கொண்டாட்டங்கள் : நிரம்பி வழியும் மருத்துவமனை, திருமண மண்டபங்கள்....
எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்பும் புதுமை விரும்பிகளுக்கு மற்றுமொரு ஸ்பெஷல் நாள் தான் இன்று.
11.12.13 என வரிசையாக அமைந்துள்ள இந்த நாள் இந்த நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே வரும் சிறப்பு நாள். அதிலும் இன்று 11 :12 : 13க்கு அதாவது 11 மணி, 12 நிமிடங்கள், 13 விநாடிக்கு மக்களிடையே மவுசு அதிகம்.
நூற்றாண்டுகளில் இது போன்று அமையும் தனித்துவமான நாட்களுக்காகவே சிலர் பல சிறப்புத் திட்டங்களை தீட்டி வைத்துள்ளனர். அவை என்ன மாதிரியான கொண்டாட்ட நிகழ்வுகள் எனப் பார்ப்போமா....

ஆபரேஷன் மூலம்...
குழந்தை பிறப்பதும், மழை வருவதும் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என நம்பப் பட்ட காலம் மாறி, அறிவியலின் துணை கொண்டு குழந்தையை குறிப்பிட்ட நேரத்துக்கு தங்கள் இஷ்டப் படி ஆபரேஷன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர் தம்பதிகள்.

பிரசவம்...
அந்தவகையில், பேன்சி தேதி என வர்ணிக்கப் படும் இன்று, தங்களது குழந்தையின் பிறந்தநாளாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் முன்கூட்டியே மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனராம். அதுவும் 11 : 12:13 மணிக்கு குழந்தை பிறக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனராம்.

திருமணம்...
அதேபோல், பல காதலர்கள் இன்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனராம். அதனால், முகூர்த்த நாட்களைப் போலவே இன்றும் திருமண மண்டபங்கள் கிடைக்காமல் அல்லாடுகின்றனராம் ஜோடிகள்.

வித்தியாச விரும்பிகள்....
தங்களது வாழ்க்கையில் மறக்க நினைக்காத சில நிகழ்வுகளை இன்று நடத்த திட்டமிட்டுள்ளனராம் சில வித்தியாச விரும்பிகள். அதன் படி, இந்த நூற்றாண்டில் ஒரு முறை மட்டுமே வரும் 11ம் தேதி, 12 மாதம், 13ம் வரும் என்ற இன்றை பேன்சி நாள் எனக் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

கேக்....
இன்றைய தினக் கொண்டாட்டத்திற்கென சிறப்பு வடிவ கேக்குகளை விற்பனைக்கு விட்டுள்ளனர் பேக்கரிக்காரர்கள். சிலர், திருமணம், பிரசவம் என எதிலும் கமிட் ஆகாவிட்டாலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டுள்ளனராம்.

களைக்கட்டும் கொண்டாட்டங்கள்....
பள்ளி , கல்லூரிகளில் இந்தச் சிரப்பு நாளை மாணவர்கள் கொண்டாடுகின்றனர். அதேபோல், அலுவகங்களில் ஊழியர்களும் தங்களது சக ஊழியர்களுடன் இந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டுள்ளனராம்.

சிறப்புக் கொண்டாட்டங்கள்...
அவர்களின் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்கவே இந்த 11.12.13 என எழுதப்பட்ட கேக்குகள் சந்தைக்கு வந்துள்ளன. மற்ற நாட்களைப் போல் இது மற்றுமொரு நாள் எனக் கருதாமல், இதனைச் சிறப்பாகக் கொண்டாட விரும்புகின்றனர் மக்கள்.

பேன்சி நாட்கள்....
இதற்கு முன்னரும் இதேபோன்று மக்களால் கொண்டாடப் பட்ட சில சிறப்புத் தினங்கள் உங்கள் பார்வைக்கு...
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications