முகத்தில் தெளித்த சாரல்...
எங்கே மனிதர்கள் இருக்கின்றனரோ
அங்கே ஈக்களையும் காண்போம்
புத்தர்களையும் தான்
இஸ்ஸா
மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதரணமானது இந்த ஹைகூ-
ஆழ்ந்து கவனித்தால் மிகவும் நுட்பமானது.
நாம் எதையுமே ஆழந்து கவனிப்பதில்லை-
நம் விரல்களைக் கூட
நகங்களைக் கூட
கவனிப்பது மிகவும் சிரமமானது-
பார்ப்பது மிகவும் சுலபமானது
பார்ப்பதையும் கேட்பதையுமே கவனிப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.
பார்ப்பதும், கேட்பதும் கவனிப்பதற்காக அல்ல-
கவனிப்பதிலிருந்து தப்பிப்பதற்காகத்தான்.
மனிதர்கள் இருக்குமிடமெல்லாம்-
ஈக்கள் இருக்கின்றன-
காரணம் மனிதர்களுடன் சேர்ந்தே
அழுக்கும் இருகின்றது-
அழுக்கு, அசுத்தம் இருக்கும் போதெல்லாம்-
அவற்றில் பிழைக்கிற ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன-
நம் கழிவுகள் அவற்றிற்கு உணவாகின்றவே
என்று ஒருபோதும் மகிழ வேண்டியதில்லை-
அவற்றின் கழிவுகள் மறுபடியும்
நமக்கே உணவாகத் திரும்பி வருகின்றன.
மனிதர்கள் இருக்கும் இடத்தில்
ஈக்களைத் தேட ஒரு போதும் நாம் பிரயத்தனம் செய்வதில்லை
அதற்கான அவசியமில்லை-
நமது பிரயத்தனமெல்லாம்
ஈக்களைத் தேடுவதில் இல்லை-
அவற்றைத் துரத்தியடிப்பதில் தான்-
நம்மிடமிருந்து அவை தப்பிப்பதில்லை-
நாம்தான் அவற்றிலிருந்து தப்பிக்கிறோம்-
யானைக்கான வலையில் யானை விழுகிறது-
கொசு வலையில் மனிதர்கள் புகுந்து கொள்கிறார்கள்
என யாரோ சொன்னது நிஜம்.
கழிவு அடிப்பகுதியிலிருந்து வருகிறது-
உடலின் இறுதி உறுப்பு கழிவின் முகத்துவாரம்.
கழிவு கீழ் நோக்கிச் செல்கிறது-
வியர்வையும் - மேல் பகுதி
எச்சிலும் மேல் பகுதி
மையப்பகுதி சுத்திகரித்துக் கொண்டே
மேல்பகுதிக்குக் கழிவை உதைத்துத் தள்ளுகிறது.
ஞானம் மேல்நோக்கிய பயணம்-
உள்மையத்தை நோக்கிய மனப்பயணத்தில்
ஞானம் உற்பத்தியாகிறது.
மனிதர்களை இருக்கும் இடத்தில்
கழிவு மட்டுமல்ல
ஞானமும் தான் உண்டாகிறது.
நம்மிடையே ஈக்கள் மட்டுமல்ல-
தேனீக்களும் தான் இருக்கின்றன.
மலத்தைச் சுற்றும் ஈக்களும் இருக்கின்றன-
மலர்களைச் சுற்றும் தேனீக்களும் இருக்கின்றன-
ஈக்கள் உருவாகக் கழிவு இருப்பது போல
புத்தர்கள் உருவாக ஞானமும் நிறைந்திருக்கிறது.
நம் கண்களுக்கு கழிவு மட்டுமே தெரிகிறது-
ஞானம் தெரிவதில்லை.
ஈக்கள் மட்டுமே தெரிகின்றன-
புத்தர்கள் தெரிவதில்லை.
ஈக்களைக் கண்டு பிடிப்பதைப் போலவே
புத்தர்களைக் கண்டு பிடிப்பதும் எளிது-
நம் பார்வையில் ஆழம் அதிகரிக்க வேண்டும்-
நம் கவனிப்பு அடர்த்தியாக வேணடும்.
எதிர்மறைத் திசையிலேயே செல்லும் நம் ஆர்வத்தை
திருப்பிச் செலுத்த வேண்டும்.
அன்பும், கருணையும், தன்முனைப்பற்ற தன்மையும்
நிரம்பி வழிய வேண்டும்-
எதிர்பார்ப்பற்று செடிக்கு நீரி ஊற்றுபவர்க்கும்,
வாசலைப் பெருக்குபவர்களும்,
செருப்பின் அறுந்த பகுதியிலே முழு கவனத்தையும் செலுத்துபவர்க்கும்
உளியின் மேல் தன்னை முழுவதுமாக குவித்திருப்பவர்க்கும்
புத்தர்களாகத் தெரிபவர்கள்-
மற்ற புத்தர்களைத் தேடுவதற்கு முன்
நமக்குள் ஒளிந்திருக்கும் புத்தரைக் கண்டுபிடிக்க முனைவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications