கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு காட்டுல பெரிய்ய ஆலமரம் இருந்தது. அதுல ஒரு சிட்டுக் குருவி கூடுகட்டி முட்டை இட்டு அடைகாத்து ஒரு குட்டிக் குஞ்சு பொரிச்சது.
குட்டிக் குருவிக்கு ரொம்பச் செல்லம். அது என்ன சொன்னாலும் குருவி கேக்கும்.
ஒரு நா, அம்மா குருவி இரை கொண்டாந்து குட்டிக் குருவிக்கி ஊட்ட வந்தது.
அம்மா அம்மா, நா ஒரு கதை சொல்லுவனாம் நீ கேப்பயாம். அப்பொதாம் நா இரை திம்பேனாம் ன்னது.
சரி, சொல்லு ன்னது தாய்க் குருவி.
ஒரு குளத்துல அழகான ஒரு மீன்குஞ்சி இருந்துதாம்.
ம்போட்டுக் கேட்டது தாய்க் குருவி.
ரொம்ப சந்தோசம தண்ணிக்குள்ள மேல வரவும் கீழெ போகவுமா விளையாடிக்கிட்டே இருந்தது. அந்த மீன் குஞ்ச பிடிக்கணும்னு ரொம்ப நாளா ஒருகொக்கு கண்ணு வச்சிக்கிட்டே இருந்துதாம்.
ஒரு நா அந்த மீன்குஞ்ச பிடிச்சிட்து கொக்கு. என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. கல கலன்னு சிரிசிதாம் மீங்குஞ்சு.
கொக்குக்கானா ஆச்சரியம்.
அப்பொ அந்த மீங்குஞ்சு சொல்லிச்சாம்:
கொக்கு கொக்கு நா ஒரு கதை சொல்லட்டுமான்னு கேட்டுதாம்.
கதைன்னா ரொம்ப இஸ்டம்; சொல்லு சொல்லுனுதாம்.
படித்துறையில மீன்குஞ்ச விட்டது. மீன் குஞ்சு சொல்ல ஆரம்பிச்சது.
ஒரு காட்டுல ஒரு நரி இருந்தது.
ம் போட்டு கேட்டுது கொக்கு.
அந்த நரிக்கு ரொம்ப பசி வந்துட்டது. எங்கயுமே இரை கிடைக்கல. சுத்தி சுத்தி வந்தது. பசி அதிகமாயிட்டது.
அப்பொ,
தூரத்துல ஒரு கொடிமுந்திரி (திராட்சை) தோட்டம் கண்ணுக்குத் தெரிஞ்சது. அங்கெ போனா ஏதாவது கிடைக்கும்னு போனது.
ரொம்ப உயரத்துல ஒரே ஒரு முந்திரப்பழக் கொத்து நல்லாப் பழுத்து வாசம் கமகமன்னு வருது. நரிக்கு என்னா செய்யறதுன்னு தெரியல!
எப்படியாவது பழத்த கவ்விப் பிடிச்சிற வேண்டியதுதாம் னுட்டு, ஒரு குதி குதிச்சதுன்னு சொல்லி நரி எப்பிடி குதிக்குமொ அப்பிடி குதிச்சிக் காட்டுனது மீன் குஞ்சு.
கொக்குக்கு சிரிப்பு வந்துட்டது!
ஓம் மாதிரி ரெக்கையில்ல: இருந்திச்சின்னா பறந்து போயி பழத்த பறிக்கலாம்ன்னு மீன் குஞ்சு சொல்லவும் கொக்குக்கு பெருமை வந்துட்டது,தனக்கு இறக்கை இருக்கிறத நினைச்சி.
நரிக்கு பசிஇன்னும் ரொம்ப அதிகமா ஆயிட்டது. எப்பிடியாவது அந்தப் பழத்த கவ்விப் பிடிச்சிரனும்னுட்டு இன்னும் உசரத் துள்ளிக் குதிச்சது. முடியல.
நின்ன இடத்துலயிருந்து குதிச்சா சரிப்பட்டு வராதுன்னு சொல்லி பின்னாலயே கொஞ்ச தூரம் நடந்து போயி ஓடி வந்து, இப்பிடி ஒரே குதியா துள்ளிக் குதிச்சதுபாருன்னு சொல்லிக்கிட்டு மீங்குஞ்சு குளத்துத் தண்ணிக்குள்ள போயி விழுந்துட்டது!
ஏய்ச்சிப் போட்டேம் ஏய்ச்சிப் போட்டேம்
ஏழு ரூவா வாங்கிப் போட்டேம்
பாறைப்பட்டி சந்தையில
பயறு வாங்கித் தின்னுப் போட்டேம்
ஆ அங்கு
ஆ அங்கு ன்னு பாடிக்கிட்டே மீங்குஞ்சு தப்பிப் போயிட்டதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications