பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆகஸ்டு 05, 2001
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
(தொடர்ச்சி)
3.
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்:
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டில்வொளிப்பார்:
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்:
எப்போதும் கைகட்டுவார்- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார். (நெஞ்சு)
4.
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந் துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால்அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பர். (நெஞ்சு)
(தொடரும்)
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications