பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 13, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
12.
வெம்மைத் தெய்வமே,ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத்
தோன்றும் விழிகளின் தாயகமே,
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக
மென்னும் புளங் காக்கச் சொல்லிவைத்து விட்டுப் போன
விளக்கே,
கண்ணென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை
மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே.
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்
மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்,
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்:
வெளி நின் காதலி:
இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன்.
நின்னைப் புகழ்கின்றோம்.
தேவர்களெல்லாம் ஒன்றே.
காண்பனவெல்லாம் அவருடல்,
கருதுவன அவருயிர்,
அவர்களுடைய தாய் அமுதம்.
அமுதமே தெய்வம், அமுதமே மெய்யொளி,
அஃது ஆத்மா.
அதனைப் புகழ்கின்றோம்.
அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.
(தொடரும்)
DVD
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications