எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு "தமிழ்மாமணி" விருது
மார்ச் 25, 2003
எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு "தமிழ்மாமணி" விருது
பாண்டிச்சேரி:
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனுக்குத் "தமிழ்மாமணி" விருது வழங்கப்படும் என்று பாண்டிச்சேரிஅரசு அறிவித்துள்ளது. இதேபோல் "கலைமாமணி" விருது பெறும் கலைஞர்களின் பட்டியலையும்அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கலை, இலக்கியத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும்"தமிழ்மாமணி" மற்றும் "கலைமாமணி" விருதுகளை பாண்டிச்சேரி அரசு வழங்கி வருகிறது.
பாண்டிச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை இந்த விருதுகளை வழங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு "தமிழ்மாமணி" விருதுக்காக பிரபஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு ரூ.15,000 பணமும், ஒரு பவுன் எடையுள்ள தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும்வழங்கப்படும்.
இதேபோல் "கலைமாமணி" விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மு. ராதாகிருஷ்ணன் என்ற சித்தன்(இயல்), வெ. மணிக்கண்ணன் (இசை), கோவி. கலிய பெருமாள் (நாடகம்), சாந்திபாபு (நாட்டியம்),எஸ். குலசேகரன் (ஓவியம்) மற்றும் கோனேரி பா. ராமசாமி (நாட்டுப்புறக் கலை) ஆகியோர்"கலைமாமணி" விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ரூ.5,000 பணமும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும்வழங்கப்படும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications