ரொரன்ரோவில் பொங்குதமிழ் நிகழ்வு
தமிழ் மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் ரொரன்ரோவில் அமையப்பெற்ற ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில்பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.
ஈழத்தமிழர்களுடன் அமெரிக்கா, கனடா வாழ் தமிழகத் தமிழ் தமிழர்களும் இணைந்து விடுதலைப் புலிகள்சமர்ப்பித்து உள்ள இடைக்கால நிர்வாகசபை அடிப்படையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். மக்கள் கூட்டத்தினர் தமது கைகளில் தமிழீழக் கொடிகளை ஏந்தியும்விடுதலைப்புலிகள் இயக்ணீத் தலைவர் பிரபாகரனின் படத்தினை ஏந்தியும் இருந்தனர்.
புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜக் லெயிற்றன் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு தனது கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். அத்தோடு இந்த நிகழ்வுக்கு இலங்கையில்இருந்து வருகை தர விருந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்குகொழும்பில் விசா மறுக்கப்பட்ட விடையத்தை தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாகவும் கூறிய அவர்,கனடிய அரசு பேச்சு வார்த்தையில் மேலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சைவேண்டுவதாகவும் கூறினார்.
புதிய ஜனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் பெறோ தனது பதினெட்டுஆண்டு கால அரசியல் வாழ்வில் இவ்வாறானதொரு கூட்டத்தைக் கண்டதில்லை என்றும் கனடாவிலேயே பிறந்துவளர்ந்த நான் குயின்ஸ் பார்க்(நாடாளு மன்றத்திடல்) வரலாற்றிலேயே இவ்வாறானதொரு கூட்டத்தைப்பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழிக்கு தமிழ்நாடு அரசு செய்யும் தொண்டைக்காட்டிலும் வன்னி(தமிழீழம்) பெருந்தொண்டாகஇருக்கின்றது என கூட்டத்தினர் மத்தியில் காணப்பட்ட தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவையின் மாணவர் அமைப்பு துணைத்தலைவர் செந்தில் சேரன் தெரிவித்தார்.
நிறைவாக கனடிய அரசும் அனைத்துலக சமூகமும் இலங்கை அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க இலங்கைஅரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொங்குதமிழ்" நிகழ்வு முதன் முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் 2001ம் ஆண்டுதொடங்கப்பட்டு. பின்னர் ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், நார்வே, டென்மார்க் உட்பட பல்வேறு தமிழர்வாழும் நாடுகளிலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
(ஒளிப்பட உதவி: முழக்கம்)
- முழக்கம் திரு( [email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications