பாஜகவும் நாடாளுமன்றமும்!
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்து கொள்ள பாஜக தவறி விட்டது என்கிறார் பிரபலவரலாற்று ஆசிரியரும், மூத்த அரசியல் விமர்சகருமான ராமச்சந்திர குஹா.
ராஜாஜி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ராஜாஜி பிறந்த நாள் விழாவில் குஹா கூறியதாவது:
மக்களின் தீர்ப்பை மதிப்பவர்கள்தான் பொறுப்பான அரசியல் கட்சிகள். ஆனால் இந்த விஷயத்தில் பாஜக மக்களையும்மதிக்கவில்லை, மக்களின் சபையாகிய நாடாளுமன்றத்தையும் மதிக்கவில்லை.
பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படத்தான் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் மக்கள் தந்த அந்தப் பொறுப்பைமறந்து விட்டு, பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகிறது பாஜக.
அரசின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க எதிர்க்கட்சிக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் எப்போது பார்த்தாலும்அவையை நடத்த விடாமல் அமளி செய்வது, அல்லது வெளிநடப்பு செய்வது என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான செயல்அல்ல.
அது அவையையும் மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதை சத்தியாகிரகம், அஹிம்சையான போராட்டம் என்றும் கூற முடியாது. அப்படி யாராவதுசொன்னால், அது காந்தியடிகளையும், ராஜாஜியையும் அவமதிக்கும் செயலாகவே இருக்கும் என்றார் குஹா.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications