எம்.எஸ்க்கு அஞ்சலி
சரணாகதி
தமிழகம் மறக்க முடியாத ஒரு இசை மேதை எம்.எஸ்.
எம்.எஸ்சின் இனிமையான குரல் எல்லா தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்களித்து வந்திருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில்அவர் பின்பற்றிய எளிமையும் வசதியற்றவர்களிடம் அவர் காட்டி வந்த கருணையும் அன்பும் நிச்சயம் பாராட்டுக்குரியவைதான்.
சமூக இயல் பார்வையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை எல்லா சமூக இயலாளர்களுக்கும் மிகவும் முக்கியமான ஆய்வுக்குரிய வாழ்க்கை. இசைவேளாளர் சாதியில் பிறந்து மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்று பெயரின் முதலெழுத்துக்களில் தாயின் பெயரையே கடைசி வரை கொண்டிருந்த எம்.எஸ்.அன்றாட வாழ்க்கையில் ஒரு அய்யர் மாமியாகவே வாழ்ந்துவந்தவர். அபூர்வமாகவும் இப்போது மரணக் குறிப்புகளிலும் மட்டுமே சொல்லப்படுகிறஅவருடைய தந்தை பெயர் சுப்பிரமணிய அய்யர் என்றாலும் எம்.எஸ்சை அய்யராக்கியவர் அவர் அல்ல.
பேராசிரியர் எம்.என்.சீனிவாஸ் முன்வைத்த சமஸ்கிருதமயமாகல் ( ண்ச்ணடுண்ணூடிணாடிண்ச்ணாடிணிண) கோட்பாட்டின் மிக முக்கியமான எடுத்துக்காட்டுஎம்.எஸ். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதமயமாக்கலின் முழு வெற்றியின் அடையாளம் அவர். (அந்த முயற்சியின்தோல்வியின் அடையாளமாக இளையராஜாவைக் கருதலாம். எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றும் இளையராஜாவால்ராஜப்பைய்யர் ஆக முடியவில்லை.)
தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு தொண்டுகள் செய்யும் லட்சியவாதஇளைஞராகத் தொடங்கிய சதாசிவம் பின்னர் எஸ்.எஸ். வாசன், கல்கி ஆகியோரின் மார்க்கெட்டிங் நிர்வாகியாக மாறியதும்,அடுத்த கட்டத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் கணவர் / மார்க்கெட்டிங் நிர்வாகியாக மாறியதும் கூட சமூக இயல்ஆய்வுக்குரியவைதான்.
ஆழ்ந்த கடவுள் பக்தி, தீவிர தொழில் ஈடுபாடு, எளிய வாழ்க்கை, நலிந்தவர்கள் மீது கருணை, சமூக சேவை என்ற (இன்றுகாலாவதியாகிக் கொண்டிருக்கிற ஒரு) வாழ்க்கை முறையின் சிறந்த பிரதிநிதிகளாக சதாசிவம்- எம்.எஸ் தம்பதிகள்விளங்கினார்கள். இந்தியா டுடேவுக்கு சில ஆண்டுகள் முன்பு எம்.எஸ் அளித்த ஒரு பேட்டியில் சுற்றிலும் துன்பங்களில் சாதாரணமனிதர்கள் அல்லற்படுவதைப் பற்றிய தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்றுபுரியாத நிலையில் முடியக்கூடியதெல்லாம் நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய அப்படிப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோஅவ்வளவு உதவி செய்வதுதான் என்று அப்போது எம்.எஸ். கூறியிருந்தார்.
இசைப்புலமை , இசை சார்ந்த கற்றல் என்பவை தவிர மீதி அனைத்திலும் தனக்கென்று சொந்தக் கருத்தோ பார்வையோதேவையில்லை என்ற அடிப்படையில் வாழ்ந்தவர் எம்.எஸ். வாழ்க்கையின் மீதி அனைத்து விஷயங்களையும் சதாசிவத்திடம்ஒப்படைத்துவிட்ட அவரை வழி நடத்தியிருப்பது வைணவத்தின் சரணாகதிக் கோட்பாடுதான். மொத்தமாக உன்னை நீசரணாகதி செய்துவிட்டால் பிறகு எந்தத் துன்பமும் இல்லை" என்று அவர் சொன்னதாக அவருக்கு நெருக்கமானவரும்உறவினருமான இளம் கலைஞர்/ பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயனன் எழுதியிருக்கிறார்.
அப்படித் தன்னை சதாசிவத்திடம் சரணாகதி செய்ததில்தான் இசை வேளாளரான சுப்புலட்சுமி முழுமையான பிராமணப்பெண்ணாகமாற்றம் கண்டார். இசையுலக வாய்ப்புகள் சாதனைகள் எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாகக் கிடைத்தலாபங்கள். நஷ்டங்கள் என்ன என்பதை ஒரு சமூக இயல் பார்வையிலான ஆழமான ஆய்வுதான் சொல்லமுடியும். தன்மேதமையை ஒரு பார்ப்பன கருத்தியல் கலை வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் விரித்திருந்தால் அவர் இன்னும்என்னவெல்லாம் ஆகியிருக்கக் கூடும் என்பது இப்போதைக்கு ஒரு சுவையான கற்பனை மட்டும்தான்.
நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் காற்றினிலே வரும் அவர் கீதம்.
(தீம்தரிகிட, டிசம்பர் 16-31)
- ஞாநி([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. சபாஷ் ஜெ!
2. சங்கராச்சாரி-யார்?
3. சங்கர மடத்தை ஏன் காப்பாற்ற வேண்டும்?
4. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
5. ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
6. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள்பின்வரும் முகவரியில் முயலலாம்.
ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications