நதிச்சிறை: புத்தக விமர்சனம்
முதல் தொகுப்பு என்றாலே ஒரு சில கவிதைகள் மட்டுமே அதில் தேறும். ஆனால், ந.பெரியசாமியின் இந்தத் தொகுப்பில் பலகவிதைகள் சிறந்தவையாக உள்ளன.
தனது படைப்பின் மீது உள்ள நம்பிக்கையாலோ என்னவோ, இதற்கு யாரிடமும் அணிந்துரையோ, மதிப்புரையோ இவர் வாங்கவில்லை.தனது கவிதைக்கான விசிட்டிங் கார்டாக தனது கவிதைகளே இருக்கட்டும் என்று நினைத்து விட்டார் போலும்.
அழகான, ரத்தினச் சுருக்கமான முன்னுரையை வைத்து விட்டு, கவிதைகளை படிக்க நம்மை அனுப்பிவிடுகிறார். முன்னுரையே இவரதுகுழந்தை உள்ளத்தை சொல்லும்.
கவிதைகள் இன்னும் ஆச்சரியங்களையும், பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. எப்படித்தான் எழுதுகிறார்களோ என வியந்த நானும் எழுதி தொகுப்பாக்கி விட்டேன். என்னால் எழுதப்பட்டவை என்பதற்காக மிகச் சிறந்த கவிதைகள் எனக் கூறவில்லை. எனை பாதித்த, தோன்றிய விசயங்ளை எனக்குத் தெரிந்த கொஞ்ச வார்த்தைகளைக் கொண்டு கவிதையாக்கியுள்ளேன். மழலைகள் எதை பேசினாலும், கிறுக்கினாலும் சந்தோசம் பூக்கும் மனம் கொண்ட தாங்கள் இதையும் ஏற்றுக் கொள்வீர்களென நம்புகிறேன்.
புத்தகத்தின் தலைப்பாகிய நதிச்சிறை கவிதை ஒன்று போதும், கவி சாம்சாஜ்யம் ஒன்று இவருக்காக காத்திருக்கிறது என்பதைக்காட்ட. இதோ கவிதை:
அழகில் வியந்து
ஆளுமையில் பிரமித்து
சீற்றத்திற்கு பயந்து
சிதறிய சாரலில்
உடல் சிலிர்த்து
தழுவலில் வெப்பம் தணிய
என்னுள் அற்புதங்களை
நிகழ்த்திய நதி
அடைபட்டுக் கிடக்கிறது
பெட்டிக்கடைகளில்
பாக்கெட்களாக...
(நதிச்சிறை: ந.பெரியசாமி, பக்கம் 64, விலை ரூ.20, நூதனா பதிப்பகம், பி-2, தொலைபேசி ஊழியர் குடியிருப்பு, பஸ் நிலையம் எதிரில்,ஒசூர்-635 109)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications