இந்தியில் வைரமுத்துவின் கவிதைகள்
சென்னை:
கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளின் இந்தி மொழிபெயர்ப்பு புத்தகமாக நாளை வெளியாகிறது.
கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக வளமான திரைப்படப் பாடல்களை எழுதி வரும் வைரமுத்து 600க்கும்மேற்பட்ட தமிழ்க் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது கவிதைகள் "ஏ டிராப் இன் ஸர்ச் ஆப் தி ஓஷன்" என்றபெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அந்த நூல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந் நிலையில் இப்போது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 60 கவிதைகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.வைரமுத்துவின் புகழ்பெற்ற கவிதைகளான ஒன்பதாம் யோகம், முதிர்கன்னி, ஓ நயாகரா, சிறகாயணம், ஞானத்தீ,இலை, ஒரு நதியின் விதி, கூடு, விலங்கு முதலான உலகம் முழுமைக்கும் பொருந்தும் கவிதைகள் இதில் அடங்கும்.
தமிழிலும், இந்தியிலும் புலமை மிக்க செளரிராஜன், டாக்டர் சுப்பிரமணியம், இந்தர்ராஜ் பெய்த்,பாலசுப்பிரமணியம், ஈஸ்வர் கரூண் ஆகியோர் அடங்கிய குழு இந்தக் கவிதைகளை மூன்றாண்டுகளாய்மொழிபெயர்த்து பல முறை திருத்தம் செய்துள்ளது.
இக் கவிதைகள் பிரபல இந்தி இலக்கியப் பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. "பிந்துசிந்து கி ஓர்" என்ற தலைப்பில் இக் கவிதை நூலை டெல்லியி லுள்ள ராஜ்கமல் பதிப்பகம் வெளியிடுகிறது.
நாளை மாலை 6 மணிக்கு டெல்லி கோப்பர் நிக்கஸ் மார்க்கில் அமைந்திருக்கும் எல்.டி.ஜி. கலையரங்கத்தில் புத்தகவெளியீட்டு விழா நடைபெறுகிறது. சாகித்ய அகாடமியின் தலைவர் கோபிசந்த் நாரங் கவிதை நூலை வெளியிடஇந்திக் கவிஞர் குல்சார் முதற்பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications