என் தலை கனக்கிறது-ஜெயகாந்தன்
சென்னை:கலைஞர் விருதைப் பெற்றதால் எனது தலை கணக்கிறது, அதனால் பணிவோடு தலை குனிகிறேன் எனஎழுத்தாளர் ஜெயகாந்த் கூறினார்.
![]() முதல்வர் கருணாநிதியிடம் கலைஞர் விருது பெற்ற பின் அவர் பேசுகையில், நான் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறேன். அந்த விருதுகள் எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தது தான்.ஆனால், கலைஞர் விருது யாரும் எதிர்பாராதது. தமிழர்கள் போராடி எனக்கு ஞானபீட விருது பெற்றுத் தந்தார்கள். அதுபோல இந்த விருதிலும் ஏதாவது சூழ்ச்சிஇருக்குமோ என எண்ண வேண்டாம். கருணாநிதி அவராகவே இருக்கிறார், நான் நானாகவே இருக்கிறேன். எங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கட்டும், பகைமை ஏன் இருக்க வேண்டும். எங்களை இணைத்து வைப்பதுமொழி. இதுவரை நான் பெற்ற விருதுகளை விட இதுதான் மிகச் சிறப்பானது. இந்த விருதைப் பெற்றதால் எனது தலை கணக்கிறது, அதனால் பணிவோடு தலை குனிகிறேன் என்றார். சிலம்பொலி செல்லப்பன் பேசுகையில், மேடையின் பின்புறம் உள்ள கருணாநிதியின் படத்தில் நெற்றியில் 3கோடுகள் உள்ளன. அப்படி இருந்தால் எந்த எதிரியாலும் வெல்ல முடியாது. உங்களையும் யாராலும் வெல்லமுடியாது என்றார். வழக்கம் போல மனோரமாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். முதல்வர் கருணாநிதியோடு நடித்த ஒரே நடிகைநான்தான். மணிமகுடம் நாடகத்தில் அவர் நாயகன், நான் நாயகி. சினிமா துறையில் எல்லோரும் ஆச்சி என்றுஎன் காலை தொட்டு வணங்குவார்கள். நான் கருணாநிதியின் காலை தொட்டு வணங்குகிறேன். அவர் 100 வயதைத் தாண்டியும் வாழ்ந்து நாட்டை ஆளவேண்டும் என்றார். |
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்













Click it and Unblock the Notifications