பெரியார் தோட்டத்து மலர் கருணாநிதி: கி.வீரமணி

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி திமுக மாணவரணியினர் கருணாநிதி எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வழங்கி, கொண்டாடினர்.
இதற்கான விழா சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வழங்க, அதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
விழாவில் கி.வீரமணி பேசுகையில்,
ஒரு கொள்கை பரவ வேண்டும் என்றால் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதியின் பிறப்பு, எழுத்தாற்றல் உலகிற்கு கிடைத்த திருநாள்.
இன்றைய நாளில் நல்ல திட்டங்கள் செயல்படாமல் இருப்பதற்கு சிலரின் பிறப்பு காரணமாகி விடுகிறது. சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக தான் ராமன் பிறந்தாரா? என்ற கேள்வி நம் முன் எழுகிறது.
பெரியார் தோட்டத்தில் மலர்ந்த வண்ணமலர் நம் கருணாநிதி. அவரிடம் இருந்து எழுத்தாற்றலை பிரிக்க முடியாது. அவரது கைக்கு ஓய்வில்லை. அவரது சிந்தனைக்கு ஓய்வில்லை. ஓய்வறியாத சூரியன் அவர்.
85 வயது இளைஞரான அவர் துன்பத்தையும் நகைச்சுவை உணர்வுடன் பேசக் கூடியவர். 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தோல்வியே அறியாதவர் என்றார்.












Click it and Unblock the Notifications