அமெரிக்க வானொலியில் தேமதுரத் தமிழோசை!

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று சொன்னான் பாரதி அன்று. ஆனால் இன்றோ தமிழ்நாட்டில் 'இங்கிலிஷ்' மோகம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகர வானொலி நிலையத்தில் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? உண்மையை நம்பித்தானே தீர வேண்டும்!
ஹூஸ்டன் மாநகர நண்பர்கள் சிலர் இணைந்து 'கலக்கல் கதம்பம்' என்ற தமிழ் நிகழ்ச்சியை வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மாலை (அமெரிக்க மத்தியப் பகுதி நேரப்படி - Central time) 6 முதல் 8 மணி வரை நடத்துகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இருப்பதாலேயே இந்தப் பெயர் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
இந்த நிகழ்ச்சிகளை ஹூஸ்டனில் 1050 AM அலைவரிசையில் அல்லது இவர்களின் இணையத்தளம் (www.houstontamil.com) வழியாக நேரடியாகக் கேட்கலாம். கடந்த வார நிகழ்ச்சிகளின் பதிவுகளையும் இவர்கள் இணையத் தளத்தில் பதிந்து வைத்திருப்பது இன்னொரு சிறப்பு.
கதை நேரம், வினாடி வினா, தெரிந்த பாடல்-தெரியாத ராகம், வெட்டிப் பேச்சு, விவாத மேடை முதலான பல்சுவை நிகழ்ச்சிகளுடன் பஞ்ச தந்திரம், திரை விமர்சனம், நேயர் விருப்பம் போன்ற திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளும் உண்டு.
நிகழ்ச்சிகளில் நேயர்கள் கலந்துகொள்ளவும் வாய்ப்புண்டு. கடந்த வாரம் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' நிகழ்ச்சியில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் (அமெரிக்கத் தமிழர்கள்) ஆங்கிலம் கலவாத தமிழ் பேசியது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.
மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும் என்றந்தப்பேதை உரைத்தான்
சாகாவரம் பெற்றது தமிழ். அது பல வடிவத்தில் வாழும் என்பதற்கு பல சாட்சிகள் உண்டு. நல்ல முயற்சி எடுத்துவரும் தமிழர் அனைவருக்கும் தமிழ்த் தாயின் ஆசிகள் உரித்தாகுக.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications