தன்னம்பிக்கை, முயற்சியும் சாதனையின் ரகசியம்
மண்ணச்சநல்லூர்: தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் கூறினார்.
திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இரவு கனவு மெய்ப்பட என்ற இளையோர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன், பேசியதாவது:
தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியும். வாழ்கிற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாக இருக்க வேண்டும்.
எதைச் செய்தாலும் நாம் தன்னிச்சையாக செய்ய வேண்டும். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். வாழ்வில் ஏற்படும் திருப்பத்தை ம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரஷியப் புரட்சியாளர் ஸ்டாலின் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்தான். பின்னாளில் ரஷிய நாட்டுக்கே அதிபரானார். அதுபோல், ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் தந்தை மாமிசக் கடை வைத்திருந்தார்.
ஒருவர் முன்னேறுவதற்கு பிறப்பு தடையல்ல என்பதை உணர வேண்டும். கல்வியும், உழைப்பும் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம். மாணவர்கள் நூலகம் சென்று நிறைய கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பிறர் நம்மை நேசிப்பதைவிட நாம் நம்மை நேசிக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். படிக்கும் காலத்தில் மனதில் பதிய வைப்பதுதான் வாழ்க்கையில் கூட வரும்.
நம்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உள்ளது. இதற்குக் காரணம் நம்நாட்டின் இளைஞர்களின் திறமையே என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications