மாணவர்களுக்கு பாவேந்தர் பாடல் ஒப்பித்தல் போட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி 9,10 தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியண்ணன் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி முரசொலி அறக்கட் டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் ஒப்புவித்தல் போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை) வடக்கு ராஜ வீதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் தமிழறிஞர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தனித்தனியாக முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், 5 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.
முதல் இரண்டு பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பரிசு சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அடுத்த மாதம் 8-ந் தேதி, 9-ந் தேதிகளில் வழங்கப்படும்.
மூன்றாம், ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு வங்கி வரைவோலை மற்றும் பாராட்டு சான்று ஆகியவை மாணவர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பரிசு விபரம்:
மாவட்ட அளவில் முதல் இரண்டு இடத்தை பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 8,9-ந் தேதிகளில் காலை 10 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க தலைமை கழகத்தால் செப்டம்பர் மாதத்தில் நடை பெறும் முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் முதல்வர் கருணாநிதி நேரடியாக வழங்குகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு...
பாவேந்தர் பாரதிதாசனின் இசையமுது எனும் நூலில் தமிழ்ப்பகுதி எனும் தலைப்பில் தமிழர் முரசு எனும் பாடலில் உயர்வென்று கொட்டுக முரசே... எனத்தொடங்கி நாற்றிசை முற்றும் முழக்கு உயர்வென்று கொட்டுக முரசே... என்பது வரை (இருபது வரிகள்), புரட்சி கவிஞர் பாரதிதாசனார் கவிதைகள் எனும் நூலில் 55 சாய்ந்த தராசு எனும் தலைப்பில் வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி எனத் தொடங்கி மிக்கவரின் தொகை கொஞ்சமோ என்பது வரை 25 வரிகள், இசையமுது எனும் நூலில் தமிழ்பகுதி எனும் தலைப்பில் தமிழனே இது கேளாய் எனத்தொடங்கி இந்நாள் அவரஞ்சி விழித்தார் தமிழனே இது கேளாய் என்பது வரை (17 வரிகள்) இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு:
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்குரிய பாடல்கள் பின்வருமாறு:
புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் திராவிடர் திருப்பாடல் எனும் தொகுப்பில் தட்டுப்படாது ஒழுக்கம் எனும் தலைப்பில் தட்டுப்படாது பெரும் பொருட்கொரு.. எனத் தொடங்கி இவையே திராவிடர் ஒழுக்கம் என்பது வரை (64 வரிகள்), புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் தமிழ் எனும் தொகுப்பில் தமிழ் வாழ்த்து என்னும் தலைப்பில் தமிழே வாழ்க தாயே வாழ்க எனத் தொடங்கி ஓரா உலகின் ஒளியே வாழ்க என்பது வரை (32 வரிகள்).
புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் எந்நாளோ எனும் தலைப்பில் என்னருந்தமிழ் நாட்டின் கண் எனத் தொடங்கி சொக்கும் நாள் எந்நாளோ என்பது வரை (40 வரிகள்) இருக்க வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன், எனக் கூறியுள்ளார் பெரியண்ணன்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications