Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

150வது ஆண்டில் சென்னைப் பல்கலை!

Subscribe to Oneindia Tamil

Madras University
இந்தியாவின் மிக முக்கியமான பல கல்வி அறிஞர்களையும், பொருளாதார மேதைகளையும் உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழகம் தனது 150வது ஆண்டு நிறைவு விழாவை நாளை கொண்டாடுகிறது.

1840-ம் ஆண்டு மாநிலக் கல்லூரியின் ஒரு அங்கமாக உருவானது சென்னைப்பல்கலைக் கழகம். (அதனால்தான் இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தாய் என மாநிலக் கல்லூரியைச் சொல்கிறார்கள்.) மக்களின் உயர் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு அன்றைய சென்னை மாகாண ஆளுநர் லார்டு எல்பின்ஸ்டோன் தனிச் சட்டம் மூலம் இப் பல்கலைக் கழகத்தை லார்டு நார்டன் தலைமையில் அமைத்தார்.

அதன் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்ட திட்டங்களையொட்டி அதே பாணில் சென்னைப் பல்கலைக்கழகம் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியது.

1923-ல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கோ ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் என மிகப் பரந்து விரிந்திருந்தது.

மைசூர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக் கழகம், திருவாங்கூர், ஆந்திரா, உஸ்மானியா,ஹைஐதராபாத், மங்களூர், மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கல்லைக்கழகம், வேளாண்மை, அன்னை தெரசா, எம்ஜிஆர் என 30 பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்த பெருமைக்குரிய கல்வி நிறுவனம் இது.

தேசிய அளவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதன்மைப் பல்கலைக்கழகம்.

இத்தனைச் சிறப்பு மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டு விழாவில், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் சேவை புரிந்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்குங்கும், நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மற்றும் மதச்சார்பின்மைக்காக சோனியா காந்திக்கும் பெருமைக்குரிய டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளுக்காக முதல்வர் கருணாநிதி, வறுமை ஒழிப்புக்காக யுனிடோ தலைமை இயக்குனர் கண்டே உம்கலா ஆகியோருக்கும் இதே விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.

இந்த விழாவையொட்டி சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் 39 புத்தகங்கள் வெளியாகின்றன.

சேப்பாக்கம் வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி 8 புத்தகங்களை வெளியிடுகிறார் மன்மோகன் சிங்.

அதே போல தரமணியில் அமையவுள்ள புதிய வளாகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி 9 புத்தகங்களை வெளியிடுகிறார், சோனியா. கிண்டி வளாகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி 12 புத்தகங்களை வெளியிடுகிறார் கருணாநிதி.

சேப்பாக்கம் வளாகத்தில் கட்டப்படும் நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டி 10 புதிய புத்தகங்களை வெளியிடுகிறார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+