பிரெஞ்சு இலக்கியவாதி கிலெசியோவுக்கு நோபல் பரிசு

2008ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இலக்கியத்திற்கான பரிசை கிலெசியோ வென்றுள்ளார்.
திகில் நாவல்கள், கட்டுரைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியத்தில் அவரது எழுத்தை போற்றும் வகையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிலெசியோ ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பயணம் செய்து பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார்.
கடந்த 1985ம் ஆண்டு கிளாடி சைமனுக்குப் பிறகு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள பிரான்ஸ் நாட்டவர் கிலெசியோ என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய முதல் நாவலான லி பிராசஸ் வெர்பல் இவரது 23வது வயதில் பிரசுரிக்கப்பட்டது. தொடர்ந்து 965ம் ஆண்டு பீவர் மற்றும் 1966ம் ஆண்டு தி பிளட் ஆகிய நாவல்களை அவர் எழுதியுள்ளார்.
கடந்த 1980ம் ஆண்டு இவர் எழுதிய டெசர்ட் என்ற நாவலுக்கு பிரெஞ்ச் அகாதமி விருது கிடைத்த பிறகுதான் இவரது புகழ் பெரிதும் பரவியது.












Click it and Unblock the Notifications