மணம் இழக்கும் மலர்கள்!

Subscribe to Oneindia Tamil

Nano Flowers
-சோ.மோகனா

நமக்கெல்லாம் வாசனை என்றால் பிடிக்கும்தானே!. இயற்கையின் மணம் பரப்பிகளுள் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவைகளுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் யார் என்கிறீர்களா? நாம்தான்.

நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான். மலர்களின் மணத்தை கபளீகரம் செய்து விடுகிறதாம்! இதுதொடர்பாக நடத்திய ஆய்வுகள் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றன.

புகையும்... பூவும்...!:

காற்றுமாசின் விளைவாக இயற்கையின் இன்றியமையாத சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனைப் பற்றி செய்த ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் நம்மை வந்து தாக்கியுள்ளது.

இதனால் நமக்கென்ன பிரச்சனை என்கிறீர்களா? உள்ளது நண்பா! முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் திண்டாட்டம்! பூச்சிகள் பூக்களிலிருநது தேன் அருந்துவது இரண்டாம் காரணம்தான்!

மலர்கள் தன் மணம் பரப்பி வாசனையை விளம்பரம் செய் வதே, மகரந்தச் சேர்க்கை செய்யும் பொருட்டு, தேனீக்கள், வண் ணத்துப்பூச்சிகளை தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான்! வாகனப்புகையால், பூக்களின் மணம் குறைகிறதாம்! இதனால் மலர்களின் இருப்பிடம் தெரியாமல், பூச்சிகள் திணறித் திண்டாடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா வின் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் ஜோஸ் ஃபியுயென்டாஸ் என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் உள்ள குழு, இந்த தகவலை கண்டறிந்தது.

வாசனை... பயணம்?:

அதிகமான காற்றுமாசில்லாத சூழலில், பூக்களிலிருந்து வெளியேறும் மணம் சுமார் 1000-1200 மீட்டர் (சுமார் 1-1/4 கி.மீ) தூரம் பயணிக்குமாம்! ஆனால் காற்றில் வாகனப்புகை கலந்து /படிந்த நிலையில் மலர் களின் மணம் சுமார் 200 மீட்டர் தூரம்வரை கூட எட்டாதாம்!.

பூக்களின் நறுமணத்தைப் பரப்பும் மூலக்கூறுக்கள், வாகனப் புகையால் உண்டாகும் ஓசோன், நைட்ரேட் போன்ற நச்சுப் பொருட்களுடன் உடனடியாகக் கலந்துவிடுகின்றன. இதனால் மலர்களின் மணம் அழிந்து விடு கிறது என்கிறார் ஜோஸ் ஃபியு யென்டாஸ்.

திகிலூட்டும்... உண்மை!:

காற்றில் வாகனப்புகை கலப்பால், பூக்கள் மணம் பரப்பாத நிலையில், பூக்களின் தேன் மற்றும் மகரந்தத்தை உண்டு வாழும் தேனீ மற்றும் வண்டுகளின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனால் பூக்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. சிறு உயிரினங்கள் தங் களின் இனப்பெருக்கத்தன்மை இழக்கும் அபாய நிலை நம் முன்னே காத்திருக்கிறது.

உலகில் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவை. அனைத்தும் பூக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதால்தான் நமக்கு கிடைக்கிறது.

நண்பர்களே! சூழல் மாசுபாட் டால் தாவரங்கள் அழியும் வாய்ப்பும், பூச்சிகளுக்கும் நமக்கும் உணவுப் பிரச்சனையும் ஏற்படும் என்ற அச்சமூட்டும் உண்மைகளும் நம்மை விழிப்படைய வைத்துள்ளனவா? அனைத்து உயிரினங்களும் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றன என்பது உறுதியே! இதனைத் தடுப்பது மனிதனின் கரங்களில் தான் உள்ளது!

நன்றி: தீக்கதிர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+