கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது-போப் தூதர் வழங்குகிறார்

சென்னையில் நாளை நடக்கும் விழாவில் போப்பாண்டவரின் தூதர் இந்த விருதை வழங்குகிறார்.
சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் அமைப்பு மனித நேயம், பிறரன்பு, சமூகம், கலாசாரம், பண்பாடு, இறை மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் சமுதாய மேம்பாட்டு உழைப்பவர்களுக்கு சாந்தோம் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கி வருகிறது.
1984ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடிகர்கள் சிவாஜி, நாகேஷ், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளனர்.
இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கதிர், திருமுருகன், நடிகர் சாருஹாசன், இயக்குனர் சேதுமாதவன், நடிகை சுகாசினி ஆகியோர் சாந்தோம் விருதைப் பெற்றுள்ளனர்.
2008ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முதல்வர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாந்தோம் விருது பெற இயக்குனர் தங்கர்பச்சான், கவியரசு வைரமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை நடக்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. போப்பாண்டவரின் இந்தியத் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பஸ் குயின்டானோ விருதுகளை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications