கட்டுரைப் போட்டியில் வென்ற தூக்கு தண்டனை கைதி
திருச்சி மத்திய சிறையில் நடந்த கட்டுரைப் போட்டியில் நாகர்கோவிலை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி முதல் பரிசு பெற்றார்.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், உள்பட சுமார் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். உலக மனித உரிமைகள் தின விழாவையொட்டி கைதிகளிடம் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு மனிதநேயம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் 23 கைதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கவிதை, கட்டுரை, பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. மத்திய சிறை எஸ்பி முருகேசன் வரவேற்று பேசினார். ஜோசப் கல்லூரி விரிவுரையாளர் தாண்டீஸ்வரன், விமலா ராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக மதிப்பெண் பெற்ற கைதிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டியில் ராதாகிருஷ்ணன் என்ற கைதி முதல் பரிசு பெற்றார். 30 வயதான இவர் திருமணம் ஆகாதவர். நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த கொலை வழக்கில் இவர் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பு சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கோர்ட்டுக்குள் நடந்த கொலை வழக்கில் ராதாகிருஷ்ணனுடன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 2 கைதிகளும் தற்போது திருச்சி மத்திய சிறையில் தான் இருக்கிறார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என்கிற சூழ்நிலையிலும் கைதி ராதாகிருஷ்ணன் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, தனது எழுத்து திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசை தட்டி சென்றார்.
இவர் அஞ்சல் வழியில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினையும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பி இருக்கிறாராம்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications