கண் குத்த உரிமை கோரும் விரல்கள்- கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி கண்களை குத்த உரிமை கேட்கும் விரல்கள் என்ற பெயரில் பூடக அரசியல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை இதோ...
விரல்கள் வேகமாக வந்தன,
விழிகளை நோக்கி!
"ஏன்? எதற்காக?'' என்று;
வினா எழுப்பின விழிகள்.
"விரல்களாம் நாங்களும்
உன்னோடிணைந்துள்ள உடலின் பகுதிதானே?''
"அதிலென்ன சந்தேகம்?
அதற்காக இப்போதென்ன?''
"விழியில் நீர் என்றால்
விரைந்து துடைப்பது விரல் தானே?
விழிக்கோர் விபத்து வருமுன் பாய்ந்து
பழிக்கோர் இடமின்றி பத்து விரலும் சேர்ந்து;
கண்மூடிக் காவல் காப்பதும் மெய் தானே?
விண் மூடி மேகம் சூழ்ந்தால் மழை பொழியும்-அப்போது
தண்ணிலவும் தணல் கதிரும் மறைந்திருக்கும் என்பதாலே, இந்த
மண்மீது இனி அவை ஒளியுமிழ வரக் கூடாது எனலாமோ?
அவ்வாறே விரல்களாம் எங்களுக்கும்
அனுமதி தர வேண்டும் எனக்கேட்கும் உரிமை உண்டு!
நாங்கள் தானே நண்பராய் சேவகராயிருந்து உம்
நலன் காத்து வருகிறோம் கண்களே! அதனாலே...''
"அதனாலே என்ன?'' என்றன விழியிரண்டும்;
அதற்கு விரல் சொன்னது;
கண்ணீர் துடைத்திடவும், காத்திட இமை சாத்திடவும்
கடமையாற்றும் எமக்கு; உமது
கருவிழியில் குத்திட மட்டும்
ஒரு உரிமையிலையோ?!''
எனக் கேட்ட கதை;
நல்ல கதையா? கெட்ட கதையா?
இவ்வாறு தனது கவிதையில் முதல்வர் கூறியுள்ளார்.
யாரைச் சொல்கிறார்.. உங்களுக்குத் தெரிகிறதா டாக்டர் ராமதாஸ்?
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications