தமிழச்சி தங்கப்பாண்டியனின் பேச்சரவம் கேட்டிலையோ'

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் பேட்டி எடுத்தவர்களிடம் அவர் அளித்த பதில்களும், உரையாடல்களும் தொகுக்கப்பட்டு புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நடந்தது.
விழாவில், அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
இந்த நூலில் ஏராளமான கருத்துகள் முற்போக்கு சிந்தனையுடன் உள்ளன. பகுத்தறிவுக் கோட்பாடுகளும், சமத்துவ சிந்தனைகளும் நிறைந்துள்ள இந்தப் புத்தகம் அனைத்து திராவிட இயக்க தோழர்களும் படிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனின் முயற்சி தொடரவும், அவை வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னிலை உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், ஆங்கில இலக்கியம் படித்து ஆங்கிலத் துறை பேராசிரியையாகவும் பணியாற்றிய சுமதி, தமிழச்சியாக இருப்பது மகத்தான பெருமையாகும். நான் நானாக இருக்கிறேன் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார். இதைப் போல பல்வேறு நூல்களை அவர் எழுத வேண்டும் என்றார்.
கவிஞர் கனிமொழி பேசுகையில், தமிழச்சி தங்கப்பாண்டியன் இந்த புத்தகத்தில் பல விஷயங்களை மிக தெளிவாக, தைரியமாக முன் வைத்துள்ளார். பெண்களுக்கு படிக்கத் தெரியாது, உலக சரித்திரம் தெரியாது, அக்கம், பக்கம் பற்றி அக்கறை இல்லை என்ற கருத்தை இந்த புத்தகம் மூலம் உடைத்துள்ளார். பெண்ணின் உடலை வக்கிரங்களுடனும், போக பொருளாகவும் சமூகமும், படைப்புகளும் பார்ப்பதை அவர் திட்டவட்டமாக எதிர்த்துள்ளார் என்றார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், எனது வேர் திராவிட இயக்கம். கிராமத்துப் பெண், தமிழச்சி என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி போன்றவர்கள் இல்லை என்றால் இந்த மேடை எனக்கு கனவாகவே இருந்திருக்கும் என்றார்
விழாவில், திருச்சி எம்.பி சிவா, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மா.ராஜேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் அருள்மொழி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications