கவுன்சிலராக கலக்கும் எச்ஐவி பாதித்த பெண்
தேனி: தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராம பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி என்ற பெண் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கித் தள்ளும் கதைகளைத்தான் நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராம மக்கள் தங்களது கவுன்சிலராக எச்ஐவி பாதித்த ஈஸ்வரி என்ற பெண்ணைத் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களாக ஈஸ்வரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனது கிராமத்தில் அடிப்படை சுகாதார வசதிகளை சிறப்புற செய்து கொடுத்துள்ளார். பல வருடங்களாக இவை சாத்தியமில்லாத விஷயங்களாக இருந்தவை. ஆனால் ஈஸ்வரியின் அயராத முயற்சியால் இப்போது அடிப்படை சுகாதார வசதிகள் சிறப்பாக உள்ளன.
நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, பளிச்சென எரியும் தெரு விளக்குள் இப்படி பல வசதிகளை ஈஸ்வரி எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் என கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
அவர் என்ன வேண்டும் என்று கேட்டாலும், அதைச் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் கோடங்கிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திருக்கண்ணன்.
இப்படி கிராமமே கொண்டாடும் ஈஸ்வரியின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் சோகத்தில் நிரம்பியுள்ளது.
ஈஸ்வரிக்கு அவரது கணவர் மூலம்தான் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது. அது அவரது இரு குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக எய்ட்ஸ் பாதித்து இரு குழந்தைகளும் இறந்து போய் விட்டனர்.
தற்போது ஈஸ்வரி, அவரது கணவர் மற்றும் கடைசி மகன் ஆகியோர் மருந்து, மாத்திரைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனது சாதனை குறித்து ஈஸ்வரி கூறுகையில், நம்மால் எதையும் சாதிக்க முடியும். எச்.ஐ.வி. பாதிப்பு என்பதை எனது மனதிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன், வென்றேன். இதை நான் பெரிய சாதனையாக கருதுகிறேன் என்கிறார் புன்னகையுடன்.
கிராம மக்களுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரசாரத்திலும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் ஈஸ்வரி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications