திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் தமிழ் புத்தகக் கடை திறப்பு
தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ் புத்தகக் கடை திறக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பேருந்து நிலையங்களில் தமிழ் புத்தகக் கடைகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள கடையில் கோவை விஜயா பதிப்பகத்தினர் புத்தகக் கடை அமைத்துள்ளனர்.
இதில் பொது அறிவு, ஆன்மிகம், ஜோதிடம், சுயமுன்னேற்றப் புத்தகங்கள், சமையல், மருத்துவம், கணினி, கவிதை, இலக்கியம், முன்னணி எழுத்தாளர்களின் நாவல்கள் என அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும். ஆர்டர்களின்பேரில் தேவைப்படும் புத்தகங்கள் பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் கடையை துணை மேயர் கே.செந்தில்குமார் திறந்து வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாவட்ட தனி அதிகாரி சி.சமயமூர்த்தி தொடங்கி வைக்க, திருப்பூர் தமிழ்ச் சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன் பெற்றுக் கொண்டார்.
பதிப்புத்துறை முன்னோடியான சக்தி வை.கோவிந்தன் உருவப்படத்தை மாமன்ற உறுப்பினர் கே.சம்பத்குமார் திறந்து வைத்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications