ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தை செட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா டைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.
சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்து வைத்தார்.
கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).
சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.
சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications