பக்கவாதம் - சிகிச்சைக்கு நாடு திரும்ப முடியாமல் ரியாத்தில் தவிக்கும் தமிழர்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் திரும்ப முடியாமல், செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் சின்ன சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். நல்ல உள்ளங்களின் உதவியை ராஜேந்திரன் எதிர்நோக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சவூதி அரேபியாவில், ரியாத் நகரில், டெய்லராக பணியாற்றி வருகிறார்.

ரியாத்தில் உள்ள சிம்சி மருத்துவமனையின் விபத்து அவசர பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக ராஜேந்திரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் இடது பக்கம் முழுவதும் முழுமையாக செயலிழந்துள்ளது.

தனது சகோதரருக்கு உதவ வேண்டும் என்று கோரி ராஜேந்திரனின் சகோதரர் சேகர், ரியாத் இந்திய சங்கத்தை அணுகியுள்ளார்.

இதையடுத்து ரியாத் இந்திய சங்கத்தின் மனிதாபிமான உதவிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான ஷாஜகான் களம் இறங்கி, ராஜேந்திரனுக்குத் தேவையான உதவிகளைத் திரட்டி வருகிறார்.

மருத்துவமனைக்கு ராஜேந்திரன் கொண்டு வரப்பட்டபோது அவருக்கு மூளைச் சாவு ஏர்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தீவிரக் கண்காணிப்பில் வைத்தனர். அதிர்ஷ்டவசமாக ராஜேந்திரனுக்கு நினைவு திரும்பியது. அவரால் உடலை அசைக்க முடிகிறது.

இருப்பினும் உடனடியாக ராஜேந்திரனை இந்தியாவுக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் ராஜேந்திரன் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தனது விசாவை புதுப்பிக்காமல் விட்டு விட்டார். இதனால் அவரிடம் முறையான விசா இல்லை. எனவே, அவருக்கு விசா புதுப்பிப்பு, போக்குவரத்து செலவு, இந்திய தூதரகத்திடமிருந்து அனுமதி பெறுவது, ஏர் இந்தியா நிறுவனத்தின் ஸ்டிரெச்சரை வாடகைக்கு எடுப்பது உள்ளிட்டவற்றுக்கான மொத்தச் செலவாக 8000 முதல் 10 ஆயிரம் சவுதி ரியால்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே நல்ல உள்ளம் படைத்தோர், சக இந்தியரான ராஜேந்திரனுக்கு தாராள உதவி அளிக்க முன்வர வேண்டும் என ரியாத் இந்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.

உதவி செய்ய விரும்புவோர் மகேஷ் (செல்போன்: 050-6634823) அல்லது சேகர் (செல்போன்: 050-9145644) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ராஜேந்திரனை நம்பி அவரது ஊரில் மனைவி, இரு குழந்தைகள் (17, 13 வயதில்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+