சிறுமி-தவளை திருமணம்: விசாரணைக்கு அரசு உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள குடும்பத்தினரை மாப்பிள்ளை (தவளை) வீட்டாராகவும், மேற்கு பகுதியில் உள்ளவர்களை பெண் வீட்டாராகவும் கருதி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று இந்த கிராமத்தில் வினோதமான தவளை திருமணம் நடைபெறுவது வழக்கம்.
தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்தால் ஊரில் நோய் பரவாது என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.
அந்த வழக்கத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை காணும் பொங்கலன்று தினத்தன்று பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரிக்கும் (8), ஒரு தவளைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு:
இந்த சம்பவம் குறித்து தட்ஸ்தமிழ் உள்பட பல்வேறு மீடியாக்களில் செய்திகள் வெளியாயின.
இதையடுத்து இந்த திருமணம் குறித்து விசாரணை நடத்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளது.
அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அமிர்த கெளரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்பான செய்திகள்:
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications