நெல்லை வாலிபரை கரம் பிடிக்கும் இங்கி. பெண்
நெல்லை: நெல்லை வாலிபர் மீது காதல் கொண்ட இங்கிலாந்து பெண்ணுக்கு, அவருடன் நேற்று நிச்சயர்த்தம் நடந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நெயில் பிரைடனின் மகள் எம்மா பிரைடன். அங்கு மருத்துவராக உள்ளார். நெல்லை மாவட்டம் இட்டமொழியை சேர்ந்த தொழிலதிபர் வின்சென்ட் தியாகராஜனின் மகன் பெனியேல் வின்சென்ட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்த எம்மா அவர் மீது காதல் கொண்டுள்ளார். இதையடுத்து எம்மாவின் பெற்றொர் பாளையங்கோட்டையில் வசிக்கும் பெனியேலின் பெற்றோர்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர்.
பெனியேல் மேற்கல்வி கற்பதால் 6 மாதம் கழித்து திருமணம் முடிக்கலாம் என அவரது பெற்றொர் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனாலும் திருமணம் தமிழ்நாட்டு சம்பிரதாயப்படி தான் நடக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதேயடுத்து இரு நாட்களுக்கு முன் எம்மா, அவரது பெற்றொர், அவரது உறவினர்கள் நெல்லைக்கு வந்தனர்.
நேற்று தனது மகளுக்கு நெல்லை பிளாசாவில் நிச்சயர்த்தம் நடத்தினர். தனது உறவினர்கள் சுமார் 30 பேருடன் பட்டுச் சேலை கட்டி 1 மணி நேரம் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து எம்மாவின் உறவினர் ரிச்சர்டு கூறுகையில், வேட்டி, சட்டை அணிவது மிகவும் மகிழ்ச்சியானது. தமிழ் பண்பாடு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எங்கள் திருமண முறையிலிரு்ந்து மாறுபட்டிருந்தாலும் இது மனதுக்கு பிடித்தமாக உள்ளது என்றார் ரிச்சர்டு.
பின்னர் சகோதரிகள் தாம்பூல தட்டு ஏந்தி வர மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டார். மணமக்கள் மோதிரமும், பைபிளும் மாற்றிக் கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications