தமிழக கோவில்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு
நெல்லை: இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை 2008-09ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்புப்படி 50 கோயில்களில் தினமும் காலையில் பக்தர்களுக்கு மனம், மற்றும் உடல் நலத்தை காக்கும் யோகா, தியானம் குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர்-காந்தியம்மாள் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில், தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில், கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி பகவதியம்மன் கோயில், சுசீந்தரம் தானுமலையான் கோயில், ஆகிய 8 கோயில்களில் பக்தர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக உரிய பயிற்சி பெற்றவர்களை கோயில் நிர்வாகம் தேர்வு செய்து அறநிலையத்துறை அனுமதி பெற்று பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பயிற்சியாளர்கள் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி தேவையான தரை விரிப்புகளை கோயில் நிர்வாகமே வாங்க வேண்டும்.
பயிற்சியின் போது இந்து மாத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை பேசக் கூடாது எனவும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications