இளையான்குடியில் கட்டுரைப் போட்டி
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மக்கள் சேவை மையம் சார்பில் கட்டுரைப்போட்டி நடத்தப்படவுள்ளது.
இன்றைய கல்வி நிலையங்கள் நற்குடிமக்களை உருவாக்க உதவுகின்றதா? என்பதே கட்டுரைப் போட்டியின் தலைப்பாகும்.
மதுவினால் அழிந்து வரும் குடும்ப அமைப்பு, வரதட்சனைக் கொடுமை, அராஜகம், லஞ்சத்தால் அவதியுறும் ஏழை நடுத்தர வர்க்கம், அதிகரித்து வரும் ஆபாசம், ஒழுக்க கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைத்தல் ஆகியவை சமுதாயத்தை அச்சுறுத்தி வருகின்றது. நல்லவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
கற்றவர்கள் நல்லவர்களாக உருவாக பயிற்றுவிக்கப்பட்டால் ஏன் தனிப்பட்ட வாழ்விலும், கூட்டு வாழ்விலும் இத்தீமைகள் கடந்த பல ஆண்டுகளாக மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும். இச்சீரழிவிலிருந்து நம் எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்ற நம் சிந்தனையைக் கிளறும் ஒரு சிறு முயற்சியே இப்போட்டியாகும்.
முதல் பரிசு: ரூ .10,000
இரண்டாம் பரிசு: ரூ .5,000
மூன்றாம் பரிசு: ரூ .3,000
ஏழு ஆறுதல் பரிசுகள் தலா: ரூ .1,000
கட்டுரையின் உள்ளடக்கம் பின்வரும் மூன்று பகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
முதல் பகுதி:
இன்றைய இளைய சமுதாய சீர்கேட்டிற்குக் காரணம் கல்வித்திட்டமா?, கல்வி நிலைய நிர்வாகமா?, ஆசிரியர்களா? பெற்றோர்களா? அரசாங்கக் கொள்கைகளா, வணக்கத் தலங்களா?
ஆம் என்றால் யார் எவ்வகையில்?
இரண்டாம் பகுதி:
இதனால் நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் தீய விளைவுகள் யாவை?
மூன்றாம் பகுதி:
இந்நிலை மேம்பட நடைமுறை சாத்தியமான, ஆக்கப்பூர்வமான தீர்வுகள் யாவை?
விதிகள்:
பொய்த் தகவல்களோ மிகைப் படுத்தப்பட்ட உண்மைகளோ தகுதி இழக்க ஏதுவாகும். தமிழறிந்த இந்திய குடிமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 20/04/2009
கருத்துக்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் வரவேற்கத்தக்கது.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
பரிசு வழங்கும் நாள்: மே மாதம் 2009
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:
மக்கள் சேவை மையம்,
இக்ரா மெட்ரிக் பள்ளி,
சிவகங்கை சாலை,
இளையான்குடி - 630702
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு.
கட்டுரை அனுப்புபவர்கள் தங்கள் முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (E mail ) முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுதி அனுப்பவும்.
மேலும் விபரங்களுக்கு, ஜெ. உதுமான் மைதீன், (மொபைல் எண் 944 311 7994) என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications